Shadow

Tag: ரைட்டர் திரைப்படம்

“ரைட்டர்: தமிழ் சினிமா வளமானதாக மாறுகிறது” – பாரதிராஜா

“ரைட்டர்: தமிழ் சினிமா வளமானதாக மாறுகிறது” – பாரதிராஜா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குநர்கள் பாரதிராஜாவும் பாக்கியராஜும், ரைட்டர் படம் பார்த்த பிறகு இயக்குநர் பிராங்ளினை வெகுவாகப் பாராட்டினார். “தமிழ் சினிமாவில், ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது. எனக்குப் ரொம்பப் பெருமையாக இருக்கிறது. இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப் பார்க்கும் பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன். இயக்குநர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குநர்களை இந்தத் தமிழ் சினிமாவுக்கு தந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும்” என்றார்...
“ரைட்டர்: மாறுபட்ட கோணத்தில் போலீஸின் வாழ்க்கை” – இயக்குநர் வெற்றிமாறன்

“ரைட்டர்: மாறுபட்ட கோணத்தில் போலீஸின் வாழ்க்கை” – இயக்குநர் வெற்றிமாறன்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புகாட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படம் பார்த்த பிறகு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் பிராங்க்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார். “மிக முக்கியமான படத்தைத் தமிழ் சினிமாவிற்குத் தந்திருக்கிறார்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாகத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களைத் தயாரித்து வரும் இரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்களும் அன்புகளும். ரொம்ப நாளுக்கு முன்பாகவே விவாதிக்கப்பட வேண்டிய ஒரு ...
“ரைட்டர்: தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை” – பா.ரஞ்சித்

“ரைட்டர்: தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை” – பா.ரஞ்சித்

சினிமா, திரைச் செய்தி
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித், “தயாரிப்பாளர் அதிதி என் ரசிகையாக என்னைச் சந்தித்தார். காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார். பிறகு ரைட்டர் படத்தைப் பற்றிப் பேசி இப்படத்தைத் தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர் நான் இயக்கும் படத்தைத் தயாரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை. அதிதிக்கு சமூக அக்கறை உள்ள படங்களைத் தயாரிக்க மிகவும் ஆசை. பிறகு எங்களுடன் இணைந்தவர்கள் தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஐந்து ப...
ரைட்டர் – 35 வருஷ சர்வீஸ்

ரைட்டர் – 35 வருஷ சர்வீஸ்

சினிமா, திரைத் துளி
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கிய பா.இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது, அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினைத் தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாகத் தோன்றுகிறார் சமுத்திரக்கனி. காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். ‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’, ‘காக்கிகளின் ச...