Shadow

Tag: ரோபோ ஷங்கர்

பூமர் அங்கிள் விமர்சனம்

பூமர் அங்கிள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நல்லதொரு சூப்பர் ஹீரோ ஸ்பூஃப் படத்திற்கு முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஸ்வதேஷ் MS. சேஷு, பழைய ஜோக் தங்கதுரை, KPY பாலா, ரோபோ ஷங்கர், யோகிபாபு ஆகியோர் 90’ஸ் கிட்ஸ். இதில், யோகிபாபுவிற்கு மட்டும் கல்யாணமாகிவிட, அவரால் கல்யாணமாகாமல் இருக்கும் மற்றவர்கள், யோகிபாபுவைப் பழிவாங்க அவரது மாளிகைக்குள் களமிறங்குகின்றனர். மாளிகைக்குள் நடக்கும் கலாட்டாவே படத்தின்கதை. யோகிபாபுவின் மனைவி ரஷ்ய உளவாளி. யோகி பாபுவின் தந்தையான மதன் பாப் கண்டுபிடித்த ஆயுதங்களைத் திருடுவதே அவரது நோக்கம். மதன் பாப் கண்டுபிடித்த சில ஆயுதங்களை அமெரிக்க அரசு திருடி ஸ்பைடர் மேன், ஹல்க், தோர் ஆகியோரை உருவாக்கிவிட்டனராம். படம் பார்க்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ரசிகர்கள் நிலைமை தான் அந்தோ பரிதாபம். நகைச்சுவையாகவோ, கலகலப்பாகவோ கூடக் கொண்டு போகாமல், சகிக்கமுடியாதளவு கடியை ஏற்படுத்தும் மிகவும் சிரத்தையற்ற திரைக்கதையை எழுதியு...
பிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு

பிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் அரங்கில் 11 மார்ச் அன்று நடைபெற்றது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை, பாசிடிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் சார்பாக ராஜேஷ் குமாரும், L.சிந்தனும் தயாரித்துள்ளனர். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், “இப்படத்தின் ஷூட்டிங்கை மிகக் குறைந்த காலத்தில் முடித்துள்ளோம். ஒட்டுமொத்த குழுவின் உதவியில்லாமல் இது சாத்தியமில்லை. படத்தில் 18 ஆர்டிஸ்ட் உள்ளனர். அவர்களது ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமாயிற்று. அற்புதமான பாடல்களை அளித்துள்ள யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு நன்றி. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ரியோ ராஜை அறிமுகம் செய்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படத்தைப் பார்த்துதான், ரியோ ராஜ் இந்த கேரக்டரின் எமோஷன்ஸைச் சுமக்கக்கூடிய நடிகர் என்பதைத் ஹெரிந்து கொண்டேன்” என...
கன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை

கன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை

சினிமா, திரைச் செய்தி
முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார் போஸ் வெங்கட். அவர் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருப்பவர். தற்போது புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். விழாவில் பேசிய ரோபோ சங்கர், “நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாகப் பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னைப் பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார். பல வருடங்கள் முன்பாகவே இந்தக் கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். தான் முதன் முதலாகப...
தி லயன் கிங் விமர்சனம்

தி லயன் கிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளியான 'தி லயன் கிங்' படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள், சில வருடங்களிலேயே தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். டிஸ்னி ஸ்டியோஸின் வரலாற்றிலேயே, இப்படம் ஒரு மைல்கல். இப்படத்தைப் பார்த்த அத்தனை பேரையுமே, இசையால், அனிமேஷனால், 'ஹகுனா மடாடா (எதற்கும் கவலைப்படாதே)' எனும் உயரிய சித்தாந்தாத்தாலும் கொள்ளை கொண்டது. அந்தப் படத்தை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சியான சிலிர்ப்பு ஏற்படும். சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின், அப்படம் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தி ஜங்கிள் புக் குதூகலத்தில், டிஸ்னி இப்படத்தைப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வெளியிடுகிறது. அதுவும் 'டிஸ்னி இந்தியா', நேரடியாகத் தமிழிலேயே 'டப்' செய்து வெளியிட்டிருப்பது மேலும் சிறப்பு. வில்லன் சிங்கம், ராஜா சிங்கத்தைக் கொன்று, குட்டி சிங்கத்தையும் கொல்...
தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்

தி லயன் கிங் படத்தின் தமிழ் கர்ஜனைகள்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் - ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ்ப் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினர். “1994 ஆம் ஆண்டு, 2டி அனிமேஷனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்பு தான் 'தி லயன் கிங்'. எங்கள் டிஸ்னி நிறுவனத்துக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். இது குடும்ப உணர்வுகளைப் பேசும் படம். கதை சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். தந்தை, மகன் பாசம் தான் படத்தின் கரு. இந்திய மக்கள் பார்த்து மகிழ அவரவர் மொழிகளில் திரைப்படத்தை வெளியிடும் முய...
வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், 2013 இல் வெளிவந்த 'அத்தாரின்டிகி தாரேதி' எனும் படத்தின் மீள் உருவாக்கம் இந்தப்படம். ஆல்ரெடி பெரும் ஹிட்டடித்த நகைச்சுவை படம் சுந்தர்.சி கையில் கிடைத்தால்? ஆதித்யா ஸ்பெயினில் வாழும் பெரும்பணக்காரன். தாத்தாவின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனது அத்தையின் கோபத்தைத் தணிக்க, ஓட்டுநர் ராஜாவாய் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். தனது அத்தையைச் சமாதானம் செய்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. ஆதித்யாவாக எஸ்.டி.ஆர். தனுஷின் தயாரிப்பில் வந்த காக்கா முட்டை படத்திலேயே தன்னைக் கலாய்க்க அனுமதியளித்திருப்பார். இந்தப் படத்திலும், அது தொடர்கிறது. 'நேரத்துக்கு ஷூட்டிங் போவது' முதல், சிம்பு மீதான பொதுவான விமர்சனங்கள் எல்லாம் கலாய்க்கப் பயன்படுத்தியுள்ளனர். அவரோடு திரையில் யார் வந்தாலும், அவர்கள் அனைவரையும் மீறி தனது இருப்பைத் தக்க வ...
வாயை மூடி பேசவும் விமர்சனம்

வாயை மூடி பேசவும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பாலாஜி மோகன் அசத்தியுள்ளார். பனிமலை என்னும் ஊரில் மனிதர்களை ஊமையாக்கிவிடும் விநோதமான வைரஸ் பரவுகிறது. பேசுவதால் அவ்வைரஸ் பரவுகிறது என்பதால், அவ்வூரில் பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்துவிடுகிறது அரசு. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். பேசியே ஆளைக் கவிழ்க்கும் சேல்ஸ் மேன் பாத்திரத்தில் மிக அழகாகப் பொருந்துகிறார். பேசிப் புரிய வைக்க முடியாத விஷயமே உலகில் இல்லை என நம்பும் குணாதிசயம் கொண்டவன் அரவிந்திற்கு நேரெதிர் பாத்திரத்தில் நஸ்ரியா நசிம். பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்ததற்கு மகிழும் அஞ்சனாவாகக் கலக்கியுள்ளார். தானே வகுத்துக் கொண்ட மனத்தடைகளில் சிக்கி உழல்பவரை, அரவிந்த் தான் மீட்கிறான். வழக்கம்போல் காதல்தான் என்றாலும், சலிப்பு ஏற்படுத்தாமலும் உறுத்தாமலும் காட்சிப்படுத்தியுள்...