Shadow

Tag: ரோஷன்

ஜீனியஸ் விமர்சனம்

ஜீனியஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜீனியஸ் என்பதற்கு மேதை எனப் பொருள் கொள்ளலாம். யார் மேதை, எது மேதைத்தன்மை அல்லது மேதையாய் இருப்பது அவசியமா என்ற கேள்விகளைப் படம் எழுப்புகிறது. ஏழாவது வரை ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த தினேஷ் குமாரை, அவனது தந்தை ராம் மூர்த்தி தினேஷைக் கூண்டிலடித்து, படிப்பைத் தவிர வேறெதுவும் இல்லை என அவனது பதின்பருவத்தைச் சிறைபிடித்து விடுகிறார். ஒருநாள், அவன் வளர்ந்து நல்ல வேலையில் இருக்கும் பொழுது, அவனது மூளை ஷட்-டவுன் ஆகிவிடுகிறது. தனக்குள் பேசிக் கொண்டிருப்பது, எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது என அவன் மனம் பிறழ்கிறது. அதிலிருந்து எப்படி தினேஷ் குமார் மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. ஆச்சரியப்படுத்துவதற்கு சுசீந்திரன் எப்பொழுதும் தவறுவதில்லை. ஒன்று அசத்தி ஆச்சரியப்படுத்துவார் அல்லது பயங்கரமாகச் சொதப்பி ஆச்சரியப்படுத்துவார். நூறு நிமிடங்களுக்கும் குறைவான கால அளவு கொண்ட படம். படி, படி...