இது என் காதல் புத்தகம் – பெண்களுக்குக் கல்வி அவசியம்
ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'இது என் காதல் புத்தகம்'. அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ, இப்படத்தின் கதாநாயகியான தேவயாணி கதாபாத்திரத்தை ஏற்க, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் இது.
கல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர், "விவசாயம் செய்வதற்கும், திருமணம் முடித்து பிள்ளை பெறுவதற்கும் உங்களுக்கு எதற்கடா கல்வி?" என்று சொல்லுகிறார். ஆனால் அவரது ஒரே மகளான தேவயாணிக்கு படிப்பின் மீது நாட்டம் ஏற்படுகிறது. அதனால் தந்தையின் சிந்தனைக்கு எதிராகச் செயல்படத் தொடங்குகிறாள்....