Shadow

Tag: லட்சுமி மேனன்

சந்திரமுகி 2 விமர்சனம்

சந்திரமுகி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா,  விக்னேஷ், சுரேஷ் மேனன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம் சந்திரமுகி 2.  சந்திரமுகி 2-க்கும், சந்திரமுகி 1-க்கும் பெரிய வித்தியாசம் என்றால் அது நடிகர் நடிகைகள் மாற்றம் மட்டும் தான். மற்றபடி சந்திரமுகியில் என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த சந்திரமுகி 2 இலும் இருக்கிறது. ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது, ஒரு பெரிய பாம்பு  வருகிறது,  வேண்டா விருந்தாளியாக நாயகன் வருகிறார், பிறகு குடும்பத்திடம் நல்ல பெயரும் வாங்குகிறார்.  பக்கத்து வீட்டுப் பெண்ணாக அரண்மனை மீதான அலாதி ஆவலுடன் நாயகி இருக்கிறார்.  நாயகனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் மேல் காதலும் வருகிறது. சந்திரமுகி அறை ரகசியமாகத் திறக்கப்படுகிறது. சந்திரமுகி ஆவி...
றெக்க விமர்சனம்

றெக்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எத்தனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யக் கூடியவன் சிவா என்பது தான் இந்த 'மாஸ் ஹீரோ' படத்தின் ஒரு வரிக் கதை. ஆனால், சிவாவிற்கு சின்னச் சின்ன சண்டை எல்லாம் போடுவதில் விருப்பமில்லை. அதுக்கும் மேல், பெரிய சண்டைக்குக் காத்துக் கொண்டிருப்பவன். கிறுக்குத்தனமான கதாநாயகியாக திரையில் தோன்ற முகத்தில் குழந்தைத்தனமோ, அப்பாவித்தனமோ மிகவும் அவசியம். இப்படியான க்ளிஷேவை லட்சுமி மேனனைக் கொண்டு உடைத்துள்ளார் இயக்குநர். பாரதி மணிவாசகமாக மேடையில் இருந்து அவர் காட்டும் கம்பீரம் நன்றாக இருந்தாலும், பேசியே இராதவன் ஒருவனுடன் ஊரை விட்டு ஓடத் தயாராக இருக்கும் கொடுமை எல்லாம் நகைச்சுவையாகவும் இல்லாமல் சுவாரசியமாகவும் இல்லாமல் கடுப்பேற்றுகிறது. நாயகியை மிகவும் கவர்ந்த ஒருவனைக் கொல்ல, அவளது தந்தையின் அடியாட்கள் சாரைச் சாரையாய் வருகிறார்கள். சிவா ஆட்களை அவர்களது வாகனத்தோடு பறக்க விடுகிறார். 'வாவ்.. வாட் எ மேன்!' எ...
மிருதன் விமர்சனம்

மிருதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிருதம் - பிணம்; மிருதன் - பிணமாய் வாழ்பவன் (ஜோம்பி) ஒரு வைரஸால் மனிதர்கள் மிருதர்களாக உருமாறுகின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அமைச்சராக வரும் R.N.R. மனோகர், அவரது அறிமுகக் காட்சியைத் மற்ற காட்சிகளில் எல்லாம் அதகளப்படுத்துகிறார். செக் போஸ்ட்டில் அவர் கெத்து காட்டி விட்டு, ஜெயம் ரவியைப் பார்த்து, "இதுக்குத்தான் தம்பி அரசியலில் கொஞ்சம் டச் வேணுங்கிறது" எனும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் அதிர்கிறது. அதே போல், காளி வெங்கட்டின் சுடும் திறமைக்கும் சிரிப்பொலி எழுந்து அடங்குகிறது. ட்ராஃபிக் போலிஸ் கார்த்தியாக ஜெயம் ரவி ஜம்மென்று இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா அண்ணன் தான் என்றாலும், தங்கை அனிகாவின் (என்னை அறிந்தாலில் த்ரிஷாவின் மகள்) க்யூட்னெஸால் அதுவும் ரசிக்கும்படி இருக்கிறது. மிருதர்கள் சுடப்படும் பொழுது, அவர்கள் வெறும் நோயாளிகள் என்று பரிதாபப்படும் மருத்துவர் ரேனுகா, க்ளைமே...
வேதாளம் விமர்சனம்

வேதாளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டுமொரு 'தல' தீபாவளி. தன் தங்கைக்காகவே வாழும் பாசக்கார அண்ணன் கணேஷ். யாரிந்த கணேஷ், தன் தங்கைக்காக என்ன என்னெவெல்லாம் செய்கிறான் என்பதே படத்தின் கதை. வீரம் போலில்லாமல், இயக்குநர் சிவா கதைக்குக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். எனினும் முதல் பாதியின் அசுவாரசியம் முகத்தில் அடிக்கிறது. கதைக்குக் கிஞ்சித்தும் உதவாத நகைச்சுவைக் காட்சிகள், 'உனக்கு குழந்தைச் சிரிப்பு' என்ற தொடர் முகஸ்துதிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அண்ணன் – தம்பி பாசத்தை ரசிக்கும்படியாகச் சொல்லிய சிவா, அண்ணன் – தங்கை பாசத்தை ரசிக்கும்படி சொல்லத் தவற விட்டுவிட்டார். ‘என்னடா இது?’ என்று யோசனையில் இருக்கும்போதே, வான வேடிக்கையுடன் ‘தீபாவளிக் கொண்டாட்டம்’ படத்தின் இரண்டாம் பாதியில் தொடங்குகிறது. அஜித் குமாரின் வில்லத்தனம் அட்டகாசமாய் மிளிர்கிறது. அவர் வில்லன்களைப் பார்த்துப் பழிப்பு செய்யும் விதமாய்ச் சிரிப்பதும், சிரித்துக் கொ...
நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை. 29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, தன் குறைபாடுகளை மீறி சிகப்பு மனிதனாக மாறி, தன் சொந்த வெறுப்பினை மட்டும் தீர்த்துக் கொள்கிறார். அதோடு அவரது பத்தாவது ஆசையும் பூர்த்தியாகிறது. இந்திரனாக விஷால். மிக மிகத் தெளிவாக இருக்கார். மிகை ஹீரோயிசம், காமெடிக் காட்சிகளில் விஜய்யை இமிடேட் செய்வது போன்றவற்றைலாம் முற்றிலுமாக தவிர்த்து விட்டு, கதைக்குத் தக...
“லக்ஷ்மி மேனனைப் பாதுகாக்கும் விஷால்” – விஷ்ணு குற்றச்சாட்டு

“லக்ஷ்மி மேனனைப் பாதுகாக்கும் விஷால்” – விஷ்ணு குற்றச்சாட்டு

சினிமா, திரைச் செய்தி
“’பாண்டிய நாடு’ படத்தில் விக்ராந்துக்கும் விஷாலுக்கும் கெமிஸ்ட்ரி நல்லாயிருந்தது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் லட்சுமி மேனனை மட்டும் மீண்டும் நடிக்க வச்சிருக்கார். விக்ராந்தை ஏன் கூப்பிடலைன்னு தெரியலை. அவர் ரொம்ப வருத்தப்பட்டார். சரி கவலைப்படாத.. அனைவருக்கும் முன் கேட்டுடலாம் சொல்லி இப்போ நான் கேட்டுட்டேன். விஷால் இதற்கு பதில் சொல்வார்னு எதிர்பார்க்கிறேன். ‘பாண்டிய நாடு’ ஷூட்டிங்கின் பொழுது, எனக்கும் ஷூட் போயிட்டிருந்தது. என்னால செட்டுக்குப் போய் லட்சுமி மேனனைப் பார்க்க முடியலை. இந்தப் படத்திலாவது எப்படியாவது பார்த்து ‘ஹை’ சொல்லணும்னு நினைச்சேன். ஆனா ‘சாரி.. இன்னிக்கு லட்சுமி மேணுடன் நெருக்கமான சில காட்சிகள் இருக்கு. டிஸ்டர்ப் பண்ணாத’ என எஸ்.எம்.எஸ். அனுப்பினார் விஷால். என்னடா இதுன்னு நினைச்சுக்கிட்டு.. ‘சரி இன்னிக்கு வர்றேன்’ என இன்னொரு நாள் சொன்னேன். ‘சாரி.. லட்சுமி மேனனுடன் தண்ணிக்க...
“பரீட்சைக்கு நேரமாச்சு” – ‘ஜிகர்தண்டா’ லட்சுமி மேனன்

“பரீட்சைக்கு நேரமாச்சு” – ‘ஜிகர்தண்டா’ லட்சுமி மேனன்

சினிமா, திரைச் செய்தி
“எனக்கு படத்தில் கொஞ்ச நாள்தான் ஷூட்டிங் இருந்தது. என்னுடைய ஃபேவரைட் ஹீரோக்களில் சித்தார்த்தும் ஒருவர். அவருக்கு ஹீரோயினாக நடிச்சது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்ற லட்சுமி மேனனுக்கு ஒரு பெரிய வருத்தம். பதினோராம் வகுப்பு பரீட்சை தொடங்கியதால்.. ‘ஜிகர்தண்டா’ ஆடியோ லான்ச்க்கு வர முடியாமல் போய்விட்டதென லட்சுமி மேனன் ரொம்பவே ஃபீல் பண்ணார். அதற்கென்னச் செய்ய முடியும்? படிக்கிற பிள்ளைங்களுக்கு சினிமாவால் சோதனைகள் வருவது சகஜம்தானே! “லட்சுமி மேனன்.. லெவன்த்தான் படிக்கிறாங்க. நான் சொல்றதைப் புரிந்து கொண்டு நடிப்பாங்களான்னு சந்தேகமாகவே இருந்தது. அவங்க மெச்சூரிட்டி லெவல் எப்படியிருக்கணும் நினைச்சுட்டிருந்தேன். ஆனா நாம எதிர்பார்க்கிற எக்ஸ்ஃபிரஷன்ஸை அவங்க முகமும் கண்ணும் கொடுத்துடுது. சித்தார்த்துக்கும், லட்சுமி மேனனுக்கும் எமோஷனல் சீன்ஸ் வரும். பயந்துட்டே இருந்தேன். பார்க்க எனக்கே ரொம்ப பிடிச்சிருந்தது”...
சுந்தர பாண்டியன் விமர்சனம்

சுந்தர பாண்டியன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
  பளபளக்கும் நீல கலர் சட்டை, நல்லவர், வல்லவர் என ஏகப்பட்ட பில்டப்களுடன் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு திரும்பியவாறு சசிகுமார் அறிமுகமாகிறார். ஊரில் உள்ள பாட்டிகள், பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு அவருடன் ஆடிப் பாட விழைகின்றனர். ஆகா ஒரு முடிவோடு தான் இருக்கார் என எச்சரிக்கை ஒலியை சத்தமாக அடிக்கிறார். ஆனால் படம் பார்ப்பவர்களை திரைக்கதையால் அறிமுக இயக்குனர் பிரபாகரன்  ஈர்த்து விடுகிறார்.   நண்பர்களுக்கு ஏதாவது ஒன்றென்றால் முன்ன நிற்கும் பாசக்கார நண்பன் சுந்தர பாண்டியன். அவன் பஸ்சில் ஏறினால் அனைவரும் ஒழுக்கமாக பயணிப்பார்கள். காரணம் சுந்தர பாண்டியன் கண்டமனூர் தலைக்கட்டு குடும்பத்தில் ஒருவன். தனது நண்பனின் காதலிற்கு உதவி செய்ய போக, அந்தப் பெண் சுந்தர பாண்டியனைக் காதலிப்பதாக சொல்லி விடுகிறாள். ஆனால் பார்க்க லட்சணமாக இருக்கும் அந்தப் பெண்ணை காதலிப்பவர்களின் பட்டியலோ மிக நீளம். அ...