Shadow

Tag: லட்சுமி ராமகிருஷ்ணன்

ஹவுஸ் ஓனர் விமர்சனம்

ஹவுஸ் ஓனர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அடையாறு ஆற்றில் வெள்ளம் வந்து, கரையோரம் இருந்த வீட்டிற்குள் எல்லாம் 12 அடி உயரத்துக்கும் மேலாகத் தரைத்தளத்தையே மூழ்கடிக்கும் அளவுக்கு நீர் புகுகிறது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான வெங்கடேசனும், அவர் மனைவி கீதாவும் வீட்டிற்குள் சிக்கிக் கொள்கின்றனர். வீட்டு வாசற்கதவைத் திறக்கும் சாவியோ தண்ணீரில் எங்கோ விழுந்து விடுகிறது. முட்டி, தொடை, இடுப்பு, மார்பு, கழுத்து என நீரின் அளவோ உயர்ந்து கொண்டே இருக்கிறது. கட்டில் மீது, நாற்காலி போட்டு அதன் மேலேறி நின்றாலும், கூரை வரை நிரம்பிவிடும் நீரிலிருந்து அவர்களால் தப்ப இயலவில்லை. 2 டிசம்பர் 2015 அன்று, நிர்வாகச் சீர்கேட்டினால் நேரிட்ட செயற்கை வெள்ளத்தால் ஏற்பட்ட எண்ணற்ற அவலங்களில் ஒன்றான இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் - ஹவுஸ் ஓனர். அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான வாசுதேவனுக்கு, தான் ஆசையாகக் கட...
அருவி சுருங்கிய புள்ளி

அருவி சுருங்கிய புள்ளி

சினிமா, திரைச் செய்தி
அருவி படம் அற்புதமானதொரு உணர்வைத் தந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கும் சுதந்திரம் ஓர் இயக்குநருக்கு முழுமையாக உண்டு. ஆனால், அதன் ஊடாக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் விதைக்கும் விஷமத்தனம் ஆபத்தானது. அனைத்துமே கற்பனை என்ற டிஸ்க்ளெயிமர் போட்டு விட்டால், ஜீ டிவியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி தான் டார்கெட் என்ற உண்மையை மறைக்க இயலாது. ஒரு நிகழ்ச்சியைக் கலாய்ப்பது என்பது வேறு, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரைக் கேரக்டர் அசாஸினேட் செய்வது என்பது வேறு. 'Bee டிவியின் 'சொல்வதெல்லாம் சத்தியம்' நிகழ்ச்சித் தொகுப்பாளரான 'ஷோபா பார்த்தசாரதி' முந்தானையை நழுவ விடுவதாகக் காட்சி அமைத்திருப்பார். அது முற்றிலும் கற்பனை தான் என இயக்குநர் சொன்னாலும், இனி ஆகப் போவது ஒன்றுமில்லை. சமூகப் பிரக்ஞையுடைய படமெனப் போற்றப்படும் படைப்பில், லக்ஷ்மி ராமகிருஷ்ணன்...
அம்மணி விமர்சனம்

அம்மணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சினிமாத்தனங்கள் அற்ற மீண்டும் ஓர் ஆரோகணத்தைத் தந்துள்ளார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். 'ஜீ தமிழ்' சேனலில் தொகுத்தளித்த 'சொல்வதெல்லாம் உண்மை' எனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட வாலாம்பா பாட்டியின் வாழ்க்கையால் கவரப்பட்டு, இப்படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி. கைக்குக் கை மாறும் 'மணி (money)' இருக்கே, அம்மணி மீதே படத்தின் கதாபாத்திரங்களுக்கு கண். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உடைய ஒவ்வொரு குடும்பமும் காலங்காலமாக எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது அம்மணி படம். அரசு மருத்துவமனையில் துப்புறவுத் தொழிலாளியாக இருக்கும் சாலம்மாவிற்குக் கணவரில்லை. அவரது மூத்த மகனுக்கு 10 வயது இருக்கும் பொழுதே அவரது கணவர் இறந்து விடுகிறார். மகளோ ஒரு ரெளடி எனப் பெயரெடுத்த அடாவடியான ஆளுடன் ஓடி விடுகிறாள்; மூத்த மகனோ குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயின்ட்டர்; இளைய மகனோ மனைவியின் பேச்சிற்கு ஆடும் ஆட்...
82 வயது அம்மணி

82 வயது அம்மணி

சினிமா, திரைத் துளி
இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படமான அம்மணியை, ‘டேக் எண்டர்டெயின்மென்ட் (Tag Entertainment)’ நிறுவனர் திரு. வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வேகத்தில் நிறைவுற்று வருகிறது. படத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர், “நிஜ வாழ்க்கை கதாப்பாத்திரத்தை அடிப்படையாய்க் கொண்டது இக்கதை. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மனிததத்தின் சம நிலையை பேணுவதற்காகவே என்ற அற்புதமான எண்ணத்தின்பால் அமைந்ததே ‘அம்மணி’. இத்தகைய நல்ல கதையை எனக்கு கொடுத்த எனது இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.  ‘விண்ணைதாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சுப்புலட்சுமி பாட்டி இப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பகல் இரவென பாராமல் பரபரவென ஷூட்டிங்கில் உற்சாகத்துடன் இருப்பார். பாட்டி என்றழைத்தால் பிடிக்காத 82 வயதான இந்நடிகை அவரை ‘‘அக்கா’ன்னு கூப்பிடுங்க’ என்பார். அவரது உற்ச...