Shadow

Tag: லதா ராவ்

#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

சினிமா, திரைத் துளி
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. நாயகன் ராஜ் கமலின் மனைவி நடிகை லதா ராவ் பேசும்போது, "என் கணவர் நடித்ததால் என்று மட்டும் சொல்லவில்லை. உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் தான். படத்தின் தலைப்பைக் கேட்டபோது முதலில் நான் அதிர்ந்தேன். இது என்ன தலைப்பு என்று எனக்குக் கோபமாக வந்தது. அவர் பேசிய பிறகுதான் புரிந்தது. இந்தப் படம் பார்த்த பிறகு பெண்களுக்குச் சுற்றிலும் உள்ள மனிதர்களால், பழகும் மனிதர்களால் உள்ள ஆபத்தைப் பற்றி யோசிக்க வைக்கும். நல்லவர்கள் தானே என்று நம்பும் நாம் அவர்களைப் பற்றி சரியானவர்கள் தானா என்று சிந்திக்க வைக்கும். யாராவது படத்தைப் பார்த்த ஒரு பெண் யோசித...
குணசித்திர நடிகர் லதா ராவ்

குணசித்திர நடிகர் லதா ராவ்

சினிமா, திரைத் துளி
கடிகார மனிதர்கள் படத்தில், கிஷோருக்கு ஜோடியாக மிக யதார்த்தமானதொரு பாத்திரத்தில் அசத்தியுள்ளார் லதா ராவ். சின்ன வீட்டில், வீட்டு உரிமையாளருக்குப் பயந்து, கணவனின் நிலை உணர்ந்து அனுசரணையாக இருக்கும் அன்பான மனைவி பாத்திரத்திக்குப் பாந்தமாகப் பொருந்தியிருந்தார். லதா ராவ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர். தென்னிந்தியத் தொடர்களில் நான்கு மொழிகளிலிலுமே தஒன்றி, சின்னத்திரையில் பிரபலமாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கிப் திரைப்படங்களில் வாய்ப்பினைத் தேடி வந்தார். முதன்முதலில் வடிவேலுக்கு ஜோடியாக, 2010 இல் வெளிவந்த 'தில்லாலங்கடி' என்ற படத்தில் உஷா எனும் காமெடிக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி அவர்களின் இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ். ரவி...
கடிகார மனிதர்கள் விமர்சனம்

கடிகார மனிதர்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கடிகார மனிதர்கள் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே கழிந்து விடுவதாலும், அதிலிருந்து தப்பிக்கவோ, இளைப்பாறவோ இயலாச் சூழலில், கடிகார முட்கள் போல் ஓடிக் கொண்டே இருந்தால் தான் சமாளிக்க இயலும். பேக்கரியில் வேலை செய்யும் கிஷோரைப் பெரிய முள்ளாகவும், பூ கட்டி விற்கும் அவரது மனைவி லதா ராவைச் சிறிய முள்ளாகவும் கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு மகள், இரண்டு மகன், கணவன், மனைவி எனக் கிஷோரின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். எவ்வித முன்னறிவிப்புமின்றி, வீட்டைக் காலி செய்யவேண்டிய இக்கட்டான சூழல் நேர்கிறது. பொருட்களை வண்டியில் ஏற்றிய பின்பே வீடு தேடி அலைகின்றனர். பல போராட்டத்திற்குப் பிறகு, 3500 ரூபாய்க்கு ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்கிறது. ஆனால், ஒரு வீட்டில் அதிகபட்சம் நான்கு பேர...