Shadow

Tag: லாக்கப்

விசாரணை விமர்சனம்

விசாரணை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரே ஓர் அட்டகாசமான கதை போதும் - நீங்களும் பயங்கரவாதி தான். கதை கூட வேண்டாம். அதிகார வர்க்கம் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியெனச் சுலபமாக அடையாளப்படுத்தும். அப்படி அதிகார வர்க்கத்தால் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படும் வீடற்ற பிளாட்ஃபாரவாசிகள் (பூங்காவாசிகள்) நால்வர் பற்றிய படமிது. நிரபராதிகளான அந்நால்வரும் முதலில் ஆந்திரக் காவல்துறையினரிடம், பின் தமிழகக் காவல்துறையினரிடம் சிக்கிப் சின்னாபின்னமாகின்றனர். அதிகாரம் - ஜாதி, இன, மத, மொழி, "வர்க்கம்" என எந்த வேற்றுமையும் பாவிக்காது. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும்; யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கும். தன் வேலையைத் தக்க வைக்க பாடுபட்டு சித்ரவதை செய்யும் இன்ஸ்பெக்டர், பதவிக்காக தனது ஆடிட்டரை காவு வாங்கும் அரசியல்வாதி, குட்டு வெளிபட்டு விடுமென சாமான்யரைக் கொல்லத் துடிக்கும் உதவி ஆணையரென அதிகாரம் அதனதன் அளவில் சக மனிதனை மனிதன...