Shadow

Tag: லால்

ஸ்டார் விமர்சனம்

ஸ்டார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திரைத்துறையில் நாயகனாக சாதிக்க வேண்டுமென்கின்ற கனவுடன் வாழ்ந்து வரும் இளைஞன், தன் கனவை நிஜமாக்க வாழ்க்கையில் என்ன மாதிரியான தடைகளையும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறான், அவற்றைக் கடந்து அவன் தன் கனவை அடைந்தானா என்பதைப் பேசும் படமே இந்த “ஸ்டார்”. சினிமாவில் சாதிக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையின் அவஸ்தைகளில் சிக்கி, சின்னாபின்னமாகி இறுதியில் தன்னை ஒரு புகைப்படக் கலைஞராக நிலைநிறுத்திக் கொண்ட ஒரு நடுத்தர மனிதன் (லால்), தன் ஒட்டுமொத்தக் கனவையும் வளர்ந்து வரும் மகன் (கவின்) தோள்களில் தூக்கி வைக்க, பள்ளியில் ஆறு வயதில் பாரதியார் வேஷம் போட்டு மேடை ஏறப் போகும் மகன் கலை, அப்பாவின் வார்த்தைகளின் வழியே எதிர்காலத்தில் தான் ஒரு நடிகனாக நாயகனாக வரவேண்டும் என்கின்ற கனவையும் தன் மனதில் ஏற்றிக் கொள்கிறான். அந்தக் கனவு அவனை எப்படி தூக்கத்தையும் நிம்மதியையும் தொலைக்கச் செய்து துரத்தியது என்பதை வி...
அமோக வரவேற்பைப் பெற்று வரும் “ஸ்டார்” படத்தின் முன்னோட்டம்

அமோக வரவேற்பைப் பெற்று வரும் “ஸ்டார்” படத்தின் முன்னோட்டம்

சினிமா, திரைச் செய்தி
'டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்டார்' எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவன...
சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறுவயதில் சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்யப் போகும் போது இல்லாத தன்னம்பிக்கை முடி திருத்தம் செய்து முந்நூற்று அறுபது டிகிரி கண்ணாடிகளில் நம்மையும் திருத்தப்பட்ட நம் தலையையும் பார்த்து,, “ச்சே நாம கூட நல்லாதான்டே இருக்கோம்…” என்று மனதுக்குள் மகிழ்ந்தபடி வெளியேறும் போது தன்மானம் தாறுமாறாக ஏறியிருக்கும். நம்மை இப்படி அழகாக்கி அனுப்பிய சலூன் கடைக்காரர் மீது மரியாதை கலந்த அபிமானமும்,  அதே சீப்பு தான் வீட்டிலும் இருக்கிறது, ஆனால் இவர் சீவுவது மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது என்கின்ற கேள்வியோடு வீடு திரும்புவோம். இந்த அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு அனுபவம் தான் படத்தின் நாயகனாக வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கும்  முடி திருத்துநராக வரும் லால் இருவருக்கும் இடையே நடக்கிறது. மேற்சொன்னபடி அப்படியே நடக்காமல் அறிமுகம் வேறு ஒரு புதிய திணுசில் ரசிக்கும்படியே நடக...
நெட் ப்ளிக்ஸில் அபிஷேக் செளபே-வின் “கில்லர் சூப்”

நெட் ப்ளிக்ஸில் அபிஷேக் செளபே-வின் “கில்லர் சூப்”

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நெட்ஃபிளிக்ஸ் உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையாகும், 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 247 மில்லியன் கட்டண உறுப்பினர்களுடன் டிவி தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் என்று உலகளவில் மக்களின் வரவேற்பு பெற்று தரமான தொகுப்புகளை வழங்கும் நெட்ஃப்ளிக்ஸில் இப்பொழுது கில்லெர் சூப் , 2024 ஆம் ஆண்டிற்கான அட்டவணையில் இணைந்துள்ளது.ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது, "கில்லர் சூப்" என்ற இணைய தொடர் இயக்கி இருக்கிறார். இத்தொடர், மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் இக்கதையில் பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்புமுனைகளைக் கொண்டது.சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான் தயாரித்துள்ளனர். வரும் ஜனவரி 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் - இல் வெளியாகிறது. இதில் மனோஜ் பாஜ்பாய், கொங்கோனா சென்ஷர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன், அனுலா நவ்லேகர்...
தமிழ்க்குடிமகன் விமர்சனம்

தமிழ்க்குடிமகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஊருக்குள் ஒரு பெரிய வீட்டிற்குள் சாவு விழுந்துவிடுகிறது. அந்த ஊரில் பிணத்திற்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யும், குடிமகன் என்று பொதுவாக அழைக்கப்படும் சின்னச்சாமி (சேரன்) கதாபாத்திரம் தனக்கு முன்பு நேர்ந்த அவமானகரமான நிகழ்வுகளால்,  பிணத்திற்கு சடங்குகள் செய்து அடக்கம் செய்யும் வெட்டியான் பணியை விட்டுவிட்டு வேறு தொழில் செய்து பிழைத்து வருகிறான்.  ஒட்டுமொத்த ஊரும் அவனை இறந்த பெரியவருக்கு இறுதிச்சடங்கு செய்து தான் ஆக வேண்டும் என்று அவனை வற்புறுத்த,  மிரட்ட, அந்தத் தொழிலை இனி தன் வாழ்நாளில் தான் ஒரு போதும் செய்யப் போவதில்லை என்று சின்னச்சாமி திடமாக முடிவு செய்து ஒட்டு மொத்த ஊரையும் எதிர்த்து நிற்கின்றான். இதன் முடிவு என்ன ஆனது என்பதே இந்த தமிழ்க்குடிமகன் பேசும் அரசியல்.சமகால சமூக நிகழ்வுகளையும், சாதிய நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் முன்னிட்டுப் பார்க்கும் போது தமிழ்க்குடிமகன் ஒரு ...
சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
லட்சுமி  கிரியேஷன்ஸ்  தயாரிப்பில்  உருவாகியுள்ள  திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்.  இயக்குநர் சேரன் கதாநாயகனாக  நடித்துள்ள இந்த படத்தை  'பெட்டிக்கடை' , 'பகிரி'  ஆகிய படங்களை  இயக்கிய  இசக்கி கார்வண்ணன்  இயக்கியுள்ளார். முக்கிய  வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி,  துருவா, 'மிக மிக அவசரம்'  புகழ்  ஸ்ரீபிரியங்கா,  தீபிக்ஷா,  அருள்தாஸ்,  ரவிமரியா மற்றும் பலர்  நடித்துள்ளனர்.  இந்தப்  படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.  ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை  கார்த்திக்  மேற்கொண்டுள்ளார்.  ‘தமிழ்க் குடிமகன்’ திரைப்படத்தின்  இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக‌ பிரபலங்கள்  முன்னிலையில்  சென்னையில்  இன்று  நடைபெற்றது. நிகழ்ச்சியின்  முக்கிய அம்சங்கள் வருமாறு: படத்தின் இயக்குந‌ர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது...
மாமன்னன் விமர்சனம்

மாமன்னன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் அருபெரும் முயற்சியால், பட்டியலினச் சமூகம் மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அதிகார அமைப்புக்குள் வர வேண்டும் என்கின்ற உயரிய எண்ணத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சரத்தாகவே நிறைவேற்றிய சமாச்சாரம் தான் “தனித் தொகுதி” திட்டம். இது கிட்டத்தட்ட 1932 ஆம் ஆண்டு காலம் தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். இதற்கு முதன்முதலாக 1891ஆம் ஆண்டு காலத்திலேயே தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பியவர்கள் அயோத்திதாச பண்டிதரும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் தான். ஆரம்பக் காலகட்டங்களில் பட்டியலினச் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் பட்டியலினப் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இஸ்லாமிய சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ...