Shadow

Tag: லிங்கா

உடன்பால் விமர்சனம்

உடன்பால் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஹா தமிழில், டிசம்பர் 30 அன்று வெளியாகிறது இத்திரைப்படம்.பரமனுக்குக் கடன் அதிகமாகிவிட, வீட்டை விற்று அதிலிருந்து மீளலாமெனத் திட்டமிடுகிறான். அதற்காகத் தங்கை கண்மணியை வீட்டிற்கு வரவைத்து, அம்மாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளன்று அப்பாவிடம் பேச நினைக்கிறார். வீட்டை விற்க ஒத்துக் கொள்ளாத விநாயகம், வள்ளலார் காம்ப்ளக்ஸ்க்குச் சென்றுவிடுகிறார். அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து விழ, அரசாங்கம் அந்த காம்ப்ளக்ஸ் விபத்தில் இறந்தவர்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவிக்கிறது. தேவை, பணம், குடும்பம், சகோதர - சகோதரி பந்தம், குயுக்தி, கடன் சிக்கல் என மனித மனங்களை ஆக்கிரமிக்கும் உணர்வுகளைக் கலகலப்பாகத் தொட்டுச் செல்கிறது படம்.இந்தப் படத்தின் கதையை, விநாயகத்தின் குடும்பக்கதை என இரண்டு வார்த்தையில் சொல்லலாம். விநாயகமாக சார்லி நடித்துள்ளார். அவரது அனுபவத்திற்கு அசால்ட்டாய் ஸ்கோர் செய்யக்கூடிய பாத்திர...
பரோல் விமர்சனம்

பரோல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இரண்டு மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கான படம் எனத் தொடங்குகிறது பரோல். அண்ணன் கரிகாலன் கொலைகாரனாக இருந்தும், அவன் மீது மட்டும் அம்மா ஆராயி மிகவும் பாசமாக இருக்கிறார் என்ற மனக்குறையுடன் இருக்கிறான் தம்பி கோவலன். ஆளுநரைப் பார்த்து, தன் மகன் கரிகாலனின் விடுதலைக்குக் கருணை மனு அளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக ஆராயி இறந்துவிடுகிறார். அண்ணனை வர வைக்காமல், அம்மாவின் இறுதிச் சடங்கைச் செய்துவிடலாமென நினைக்கிறான் கோவலன். கரிகாலனின் நண்பர்கள், பிணத்தை எடுக்க விட மாட்டோம் என பிரச்சனை செய்ய, வேறு வழியின்றி அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறான் கோவலன். மிகவும் ஆபத்தான குற்றவாளி என அறியப்படும் கரிகாலனை பரோலில் எடுப்பது மிகச் சவாலான காரியமாக உள்ளது. கரிகாலனுக்கு பரோல் கிடைப்பதில் ஏற்படும் இடைஞ்சல்களைக் கோவலன் எப்படிச் சமாளித்து அழைத்து வருகின்றான் என திரைக்கதை பயணிக்கிறது.&n...
பெண்குயின் விமர்சனம்

பெண்குயின் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ரிதம் எனும் பெண்ணின் மகன் காணாமல் போய், ஆறு வருடங்களுக்குப் பின் கிடைக்கின்றான். அவனை யார் கடத்தினார்கள், அந்தச் சிறுவனுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரிந்து கொள்ள ரிதம் நினைக்கிறார். அவரால் அதைத் தெரிந்து கொள்ள முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. “ஓப்பன் பண்ணா, காட்டுக்கு நடுவுல ‘மதர் ஆஃப் நேச்சர்’ சிலை. ஒரு கருப்பு நாய், தத்தித் தத்தி நடக்கும் சின்ன பையன், சிலைக்குப் பின்னாடியிருந்து மஞ்சள் நிறக் குடையில் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த கொலைகாரன். அதோடு படம் சரி” என பெண்குயின் பார்வையாளர்களைத் தெறிக்க விட்டுள்ளது. படத்தோடு ஒன்ற முடியாமல், தொடக்கத்தில் இருந்தே ஓர் அந்நியத்தன்மை இழையோடுகிறது. என்ன தான் விஷூவல்ஸில் அசத்தியிருந்தாலும், தட்டையான கதாபாத்திரங்களை மீறிப் படத்தில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது. சுமார் ஆறு வருடங்களுக்குப் பின் கிடைத்த மகனைத் தனி அறையில் படுக்க வைப்பதெனும் கலாச்சாரமே...
சிந்துபாத் விமர்சனம்

சிந்துபாத் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1001 இரவு அரேபியக் கதைகளில், ஏழு கடற்பயணயங்கள் மேற்கொண்ட சிந்துபாத்தின் கதை தனித்துவமானது. அதனால் தான் இதுநாள் வரை தினத்தந்தியின் கன்னித்தீவில் அவர் வாசம் செய்து வருகிறார். மனைவி வெண்பாவைக் காப்பாற்ற, சிந்துபாத் எனப் பெயரிடப்பட்ட போலி பாஸ்போர்ட்டில் தாய்லாந்து பறக்கிறான் திரு. மனைவியை எப்படிக் காப்பாற்றினான் என்பதுதான் படத்தின் கதை. கேட்கும் திறன் சற்றே குறைந்த பலே திருடன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பர்ஸ், மோதிரம், பிரேஸ்லட், செயின் என விஜய் சேதுபதி அனைவரிடமும் திருடினாலும், கழுத்தில் காயத்தை ஏற்படுத்துவது மாதிரி செயின் பறிப்பில் எல்லாம்  ஈடுபடாத நல்லவர். சத்தமாய்ப் பேசும் அஞ்சலியின் உரத்த குரலைக் கேட்டதும் காதலில் விழுகிறார். காதல் கனிந்ததும் திருட்டுத் தொழிலை விடுகிறார். அஞ்சலி மலேசியா திரும்பும் நாள் அன்று, விமான நிலையத்தில், அஞ்சலியைக் குனியச் சொல்லி, சட்டெ...