Shadow

Tag: லிஜோமோல் ஜோஸ்

ஜென்டில்வுமன் விமர்சனம் | GENTLEWOMAN Review

ஜென்டில்வுமன் விமர்சனம் | GENTLEWOMAN Review

சினிமா, திரை விமர்சனம்
பூர்ணிக்கும் அரவிந்த்க்கும் கல்யாணமாகி மூன்று மாதமான நிலையில், அரவிந்த்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வர, அரவிந்தைக் கொன்று விடுகிறாள் பூர்ணி. அல்லது இறந்து விட்ட அரவிந்தின் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சுகிறாள். அரவிந்துடன் மூன்று வருடமாக உறவில் இருக்கும் ஆன்னா, அரவிந்தைக் காணோம் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறாள். பூர்ணியின் நிலை என்ன, ஆன்னாவின் நிலை என்ன என்பதே படத்தின் கதை. சந்தர்ப்பச் சூழ்நிலையில் எதிர்பாராத விதமாகக் கொன்றுவிட்டு, அச்சிக்கலில் இருந்து வெளிவர நினைக்கும் கதாபாத்திரம் இல்லை பூர்ணி. கொலை செய்த குற்றவுணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல், எல்லா ஆண்களும் அயோக்கியமானவர்களே என்ற கோட்பாட்டினில் தீவிரமான நம்பிக்கை கொண்டவராக உள்ளார். வாய்ப்பு கிடைக்குந்தோறும் மறுபடியும் மறுபடியும் ஆண்களைக் கொலை செய்யத் தயங்க மாட்டார் என அழுத்தமாகப் படத்தை முடித்துள்ளனர். தன்னை விட வயது கு...
காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்

காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சமூகம் பேசத் தயங்கும், பேசினாலும் அருவருப்பாக அதை அணுகும் விஷயத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது படம். சாமுக்கும் நந்தினிக்குமான காதலை, சாமின் தாயிடம் சொல்வதுதான் படம். சாமாக லிஜோமோலும், நந்தினியாக அனுஷா பிரபுவும் நடித்துள்ளனர். மகளின் காதலனை வரவேற்கும் ஆர்வம் கலந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் லக்ஷ்மி. லக்ஷ்மியாக ரோகிணி நடித்துள்ளார். லெஸ்பியன் இணைகளுக்கு ஆதரவாக இருக்கத் துணைக்கு வரும் ரவீந்திராவை மாப்பிள்ளையாக நினைத்துக் கொள்கிறார் ரோகிணி. ரவீந்திரவாக நடித்துள்ள கலேஷ், சங்கடத்துடன் அந்தச் சூழலை அணுகுவது ரசிக்க வைக்கிறது. அந்தச் சூழலின் பதைபதைப்பைப் பாத்திரங்கள் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். இப்படியாகப் படத்தின் முதற்பாதி சட்டெனக் கடந்துவிடுகிறது. படத்தின் இரண்டாம் பாதியில், பிரதான கதாபாத்திரங்கள், ஓரினசேர்க்கையை எதிர்த்தும் ஆதரித்தும் பேசியவண்ணம் உள்ளனர். ஒரு வீட்டுக்குள்ளேயே, கதாபாத்திரங்...
“பேசாப்பொருளைப் பேசுறதுதான் கலைக்கு அழகும் பொறுப்பும்” – நடிகை ரோகிணி

“பேசாப்பொருளைப் பேசுறதுதான் கலைக்கு அழகும் பொறுப்பும்” – நடிகை ரோகிணி

சினிமா, திரைச் செய்தி
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். நடிகை லிஜோமோல் ஜோஸ், “நாங்க ரொம்பப் பெருமையா, சந்தோஷமா, காதல் என்பது பொதுவுடைமை படத்தை உங்க முன்னாடி கொண்டு வர்றோம். ஓரிரு நாளுல, இந்தப் படம் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்னு நாங்க நம்பலை. ஆனா நிச்சயம் நம்மைச் சுத்தியிருக்கிறவங்களைப் பத்தி நல்ல புரிதல் ஏற்படுங்கிறதை நாங்க நம்புறோம். அதைத்தான் இந்தப் படத்தோட வெற்றியா பார்க்கிறோம். அனுபவம் வாய்ந்த நடிகர்களான வினீத் சார், ரோகிணி மேம் கூ...
அண்ணபூர்ணி | த்ரில்லர் டிராமா

அண்ணபூர்ணி | த்ரில்லர் டிராமா

சினிமா, திரைத் துளி
KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் "அண்ணபூர்ணி". லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர். த்ரில்லர் டிராமாவாக உருவாகும் அண்ணபூர்ணி படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார். >> ஒளிப்பதிவு - ஹெக்டர் >> படத்தொகுப்பு - கலைவாணன் >> கலை - அமரன் >> மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM) சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது....
ஜெய் பீம் விமர்சனம்

ஜெய் பீம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
'ஆர்ட்டிகிள் 15' போல் ஒரு திரைப்படம் தமிழில் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளது ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், காண்பவர்கள் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி வருகிறது. நம்முடன் வாழும் சக மனிதர்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கின்றனரா என பொதுச் சமூகத்தின் அங்கலாய்ப்பை சமூக ஊடகங்கள் எங்கும் காண முடிகிறது. படத்தின் மாபெரும் வெற்றிக்கு அவை கட்டியம் கூறுகின்றன. காவல்காரர்கள் எப்படி இருளர்கள் மீதும், குறவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் எனும் குரூரமான உண்மையைத் தொட்டு படம் தொடங்குகிறது. அப்படி கைது செய்யப்படும் ராசாகண்ணு எனும் இருளர் இளைஞனைப் போலீஸ் அடித்து நையப்புடைக்கிறது. அவரது மனைவி செங்கேணி, வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். மனித உரிமை வழக்குகளுக்காகா ஆஜாராகும் வக்கீல் சந்துரு, காவல்...