அச்சுறுத்த வருகிறது ‘லைட்ஸ் அவுட்’
இருள் என ஒன்றும் இல்லை; ஒளி இல்லாத ஒரு சூழலே இருள் எனப்படும் என சுவாமி விவேகானந்தர் சொன்னார். இருளிற்கும் இரவிற்கும் னெருக்கமான தொடர்பு உண்டு. பொதுவாக ஒளிமயமான விஷயங்கள் தெய்வீகமாக கருதப்படுவது போல், இருளுடன் திகிலும் இணைந்து பேசப்படும். அத்தகைய இருளில் சிக்கித் திகிலிறும் ரெபெக்கா படும்பாடுதான் ‘லைட்ஸ் அவுட்’ திரைப்படம்.
டேவிட் F.சாண்ட்பெர்க் இயக்கிய குறும்படமான ‘லைட்ஸவுட்’ பரவலான வரவேற்பைப் பெற்றது. ஆவிகளைப் பற்றி ஆராய்கிற திகில் படமது. அக்குறும்படத்தை முழு நீள திரைப்படமாக எடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்து விட்டார் டேவிட். எரிக் ஹீஸெரர் கதை அமைத்து லாரன்ஸ் க்ரேவுடன் சேர்ந்து தயாரித்துள்ளார். இவர்களுடன் தி கான்சூரிங் 1, தி கான் ஜூரிங் 2, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் வானும் இன்னொரு தயாரிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் செலவில்...