Shadow

Tag: லைலா

The GOAT விமர்சனம்

The GOAT விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
The Greatest Of All the Time - எல்லாக் காலத்திலும் மிகச் சிறந்தவர். Goat of the SATS (Special Anti Terrorism Squad) என்றழைக்கப்படும் நாயகன், பயங்கரவாதத்திற்கான எதிரான நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாகச் செயற்படுகிறார் எனப் பொருள் கொள்ளலாம். 'இனி நடிக்கப் போவதில்லை' என்ற விஜயின் முடிவிற்குப் பிறகு வந்த படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கு எகிறியிருந்தது. இரண்டு விஜய் இணைந்து கலக்கும் டீசர் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. நாயகன் M.S. காந்தி ஜீவனைத் தொலைத்து விடுகிறார். பதினாறு வருட சோகத்திற்கும் குற்றவுணர்ச்சிக்கும் பிறகு ஜீவன் கிடைத்துவிட்டாலும், அதன் பின் கண் முன்னாலேயே நண்பர்களைக் காப்பாற்ற இயலாமல் இழந்து விடுகிறார் காந்தி. கடைசியில் வில்லன் ராஜிவ் மேனனின் சூழ்ச்சிக்கு பலியாகி, M.S.காந்தி தங்கப்பதக்கத்தினைப் பெறுவதுதான் படத்தின் கதை. இளம் வயது ஜீவனாக நடித்துள்ள மாஸ்...
வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, திரை விமர்சனம்
சுழல் தொடரின் வெற்றிக்குப் பிறகு, தங்கள் நிறுவனமான வால்வாட்ச்சர் ஃப்லிம்ஸ் சார்பாக புஷ்கர் - காயத்ரி தயாரித்திருக்கும் தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. வெலோனி எனும் இளம்பெண் கொல்லப்பட, கொலையாளியைத் தேடுகிறது காவல்துறை. வெலோனி பற்றி எந்தத் தெளிவான உண்மையும் கிடைக்காமல், அவளைப் பற்றி மர்மங்களும் வதந்திகளும் மட்டுமே நிலவுவதால், காவல்துறை அவ்வழக்கை மூடி விடுகிறது. ஆனாலும் உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென அல்லாடுகிறார் துணை ஆய்வாளர் விவேக். வெலோனியைக் கொன்றது யாரென விவேக் எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் தொடரின் கதை. த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கொஞ்சம் மெதுவாக நகருகிறது. இது த்ரில்லர் படம் என்பதை விட, வெலோனியின் அகத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் துணை ஆய்வாளர் விவேக்கின் அகப்பயணம் என்றே சொல்லவேண்டும். எழுத்தாளர் நாசர், ஒரு நாவலே எழுதி விடுகிறார். விவேக்கோ, ...
சர்தார் விமர்சனம்

சர்தார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மக்களுக்கு அலெர்ட் கொடுக்கும் ஒரு விஷயத்தை எடுத்து, அதை டீடெய்லாக அலசி அதில் கமர்ஷியல் சேர்த்து ஒரு பேக்கேஜிங்காக சர்தாரைக் கொடுத்துள்ளது மித்ரன் - கார்த்தி கூட்டணி. காவல்துறையில் பணியாற்றும் கார்த்தி ஓர் விளம்பரப்பிரியர். அவரது தந்தை சர்தார் ஒரு தேசத்துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டவர். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில், சர்தாரின் பெயரை வைத்து பல அரசியல் நடக்கிறது. மேலும் ஒரே நாடு ஒரே பைப்லைன் என தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் பயன்பாட்டு நீரையும் எடுத்துக் கொண்டு அதன் மூலமாக கொள்ளை லாபம் பார்க்க நினைக்கிறார் ஓர் அதிகார மட்ட வில்லன். அந்த வில்லனுக்கும் சர்தாருக்குமான லிங்கை லைலா ஓப்பன் செய்ய, கார்த்தி அதை ஃபாலோ செய்ய, அடுத்தடுத்து என்ன என்ற சுவாரசியத்துடன் பயணிக்கிறது படம் தான் ஏற்கும் வேடங்களுக்கு உடல்ரீதியாக நியாயத்தைச் செய்வதில் வல்லவர் கார்த்தி. இரு கதாபாத்திரங்களின் தன்மை ...