Shadow

Tag: லொள்ளு சபா ஜீவா

எது நல்ல படம்?_ ‘பாய் ‘திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!

எது நல்ல படம்?_ ‘பாய் ‘திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!

சினிமா, திரைச் செய்தி
மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி 'பாய் ' திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார்.இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.எடிட்டிங் இத்ரிஸ்.இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.'பாய் 'படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவியின் கொள்ளுப்பேத்தியான ஸ்ரீ நியா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இவ்விழாவில் தயாரிப்பாளர் ஸ்ரீ நியா பேசும்போது,"பாய் படம் ஒரு சஸ்பென்...
“ராயர் பரம்பரை” – முழு நீள நகைச்சுவைப் படம்

“ராயர் பரம்பரை” – முழு நீள நகைச்சுவைப் படம்

சினிமா, திரைச் செய்தி
சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத். T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை” ஆகும். மேலும் இப்படத்தில் கஸ்தூரி, K.R.விஜயா, R.N.R.மனோகர், பாவா லக்‌ஷ்மணன், சேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே. ராஜன், “இது ஒரு நல்ல படம் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறைய செலவு செய்திருக்கிறார்கள். இது பெரிய படம். இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதா...
ஜம்புலிங்கம் 3டி விமர்சனம்

ஜம்புலிங்கம் 3டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜப்பானில் கடத்தப்படும் பேபி ஹம்சியைத் தமிழக இளைஞனான ஜம்புலிங்கம் எப்படி மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கிறான் என்பதே படத்தின் கதை. கதை ஜப்பானில் நிகழ்வதால், ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் புகழைப் படத்தில் காட்டியுள்ளனர். அதை இன்னும் சுவாரசியமாக்கியிருக்கலாம். சிட்டி 'தி ரோபாட்'டாக லொள்ளு சபா ஜீவா வருகிறார். சகுனம் எனும் பாத்திரத்தில் ஈரோடு மகேஷ் நடித்திருக்கிறார். டான் டேவிட் சகுனத்தைத் தன்னுடன் கை விளங்கால் பிணைத்துக் கொண்டு குளியலறை, படுக்கையறை என இழுத்துக் கொண்டு போகிறார். கலை ஆர்வலர் டான் டேவிடாக ஒகிடா எனும் ஜப்பானியர் நடித்துள்ளார். ஐரீன் எனும் பாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். ஜம்புவால் கவரப்பட்டு, அவனைக் காதலிக்கும் பாரம்பரிய பாத்திரத்தில் வருகிறார். பரதநாட்டியக் கலைஞராகவும், ஹம்சிகாவின் அம்மாவாகவும் நடித்துள்ளார் சுகன்யா. ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களைத...