Shadow

Tag: லோகன்

ராபர் – தடம் மாறிய இளைஞனின் வாழ்க்கை

ராபர் – தடம் மாறிய இளைஞனின் வாழ்க்கை

சினிமா, திரைச் செய்தி
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.இப்படத்தின் கதை என்ன?பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன்.சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன.மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. தானும் இது போல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.ஆசை வெட்கம் அறியாது; அதை...
மீண்டும் வுல்வெரின்

மீண்டும் வுல்வெரின்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
அகாதெமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட ஹ்யூ ஜாக்மேன் மீண்டுமொரு முறையும், இறுதியாகவும் வுல்வெரின் வேடத்தில் தோன்றுகிறார். லோகன் என்ற இப்படத்தை, முந்தைய ‘தி வுல்வெரின்’ படத்தை இயக்கியிருந்த ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கியுள்ளார். 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரையன் சிங்கரின் எக்ஸ்-மேன் (X-Men) படத்தில் தான் முதல் முறையாக ஹ்யூ ஜாக்மேன், வுல்வெரின் வேடத்தில் தோன்றிக் கலக்கியிருந்தார். இப்பொழுது ஒன்பதாவது முறையாக, அதே வேடத்தில் இப்படத்தில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளிவந்த அந்தத் தொடர் படங்களில் எல்லாம், வுல்வெரினின் அதிசய சக்திகள் மட்டுமே பறைசாற்றப்பட்டன. மனித நேயத்திலும் வுல்வெரின் சற்றும் குறைந்தவர் அல்ல என்பதை இப்படம் நிலைநாட்டுகிறது. வுல்வெரினின் இக்குணமே, இதர படங்களில் இருந்து இப்படத்தை மாறுபட்டதாக்கியுள்ளது. இப்படத்தின் கதை நிகழும் ஆண்டு, 20...