Shadow

Tag: வசுந்தரா

பக்ரீத் விமர்சனம்

பக்ரீத் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பக்ரீத் கொண்டாட்டத்திற்காக ஒட்டகம் ஒன்றை வாங்குகிறார் மீஞ்சூர் பாய். அந்த தாய் ஒட்டகத்தோடு, குட்டி ஒட்டகமும் ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது. குட்டியை என்ன செய்ய என பாய் யோசிக்கும் பொழுது, ரத்தினம் அதை தான் வளர்ப்பதாகச் சொல்லி வாங்கிக் கொள்கிறான். அந்த ராஜஸ்தான் ஒட்டகத்திற்கும், அதை அன்பாக வளர்க்கும் விவாசய பின்புலம் கொண்ட தமிழ்க் குடும்பத்திற்கும் இடையே உருவாகும் பிணைப்பும், அதைப் பிரிய நேரும் பொழுதும் எழும் துயரும் தான் படத்தின் மையக் கரு. பெட்டிக் கடைகளுக்கு மிக்சர், முறுக்கு, வற்றல் முதலிய நொறுக்குத் தீனிகளை சப்ளை செய்பவராக தினேஷ் பிரபாகர் நடித்துள்ளார். மலையாள நெடியுடன் பேசும் அவர், நாயகனின் உற்ற நண்பராக நடித்துள்ளார். சின்னச் சின்ன உடல் அசைவுகளிலும், முக பாவனைகளிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மிகச் சிறந்த குணசித்திர நடிகராகப் பரிணமிக்கக் கூடிய அனைத்து லட்சணங்களும் பெற்...
கண்ணே கலைமானே விமர்சனம்

கண்ணே கலைமானே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தர்மதுரை வெற்றியைத் தொடர்ந்து, அதே பாணியிலான கதையைக் கையிலெடுத்துள்ளார் சீனு ராமசாமி. இம்முறை இன்னும் மென்மையான கிராமத்து டோனில். சோழவந்தான் வள்ளலான கமலக்கண்ணனுக்கு, வங்கி மேலாளரான பாரதி மீது காதல் எழுகிறது. அக்காதலுக்குக் கமலக்கண்ணனின் அப்பத்தா அழகம்மாள் சிவப்புக் கொடி காட்ட, கமலக்கண்ணனுடைய செயற்பாடுகள் என்ன என்பதுதான் படத்தின் கதை. புது மேலாளரை பூமாலையுடன் வரவேற்கும் வினோத வழக்கம் கொண்ட வங்கியாக உள்ளது மதுரா கிராம வங்கி. அவ்வங்கியின் மேலாளர் பாரதியாக தமன்னா நடித்துள்ளார். இது அவரது 50வது படம். தர்மதுரையிலும் சரி, இப்படத்திலும் சரி, கவர்ச்சிக்காக என நேர்ந்து விடாமல் தமன்னாவைக் கதையின் நாயகியாக சீனு ராமசாமி படைத்துள்ளார். படத்தலைப்பில் வரும் கலைமான் தமன்னாவையே குறிக்கும். தமன்னாக்கு இருக்கும் அழுத்தமான பாத்திரம் கூடக் கமலக்கண்ணனாக நடித்திருக்கும் உதயநிதிக்கு இல்லை. அதனாலே என்னவோ, இ...
கண்ணே கலைமானே – தமன்னாவின் 50வது படம்

கண்ணே கலைமானே – தமன்னாவின் 50வது படம்

சினிமா, திரைச் செய்தி
ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் 'கண்ணே கலைமானே, ஃபிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். "45 நாட்களில் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். சீனு ராமசாமி சாரின் படங்கள் எப்போதுமே தனித்துவமான இடங்களின் பின்னணியைக்கொண்டிருக்கும். கண்ணே கலைமானே பசுமையான பின்னணியையும், மேலும் படம் முழுவதும் அழகான தருணங்களையும் கொண்டிருக்கும். எனக்குப் பயமாக இருந்தபோதெல்லாம், சீனு ராமசாமி சார் அவரது வார்த்தைகள் மூலம் என்னை ஊக்கப்படுத்தினார். இளம் வயதில் இருந்தே நான் யுவன் ஷங்கர் ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன். பெண் கதாபாத்திரங்களுக்கு இந்தப் படத்தில் மிகப்பெரும் முக்கியத்துவம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்"...