‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ வந்தது.
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரிகான் தயாரித்திருக்கும் திரைப்படம் “ஜவான்”. வரும் செப்டம்பர் 7ம் தேதி அன்று இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது. இதனையடுத்து திரைப்படம் தொடர்பாக விளம்பரப்படுத்துதலில் இறங்கி இருக்கும் தயாரிப்புக் குழுவினர் திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு விசயங்களாக வெளிவிட்டு, “ஜவான்” திரைப்படத்தினை என்றென்றைக்குமான பேசு பொருளாக மாற்றி வருகின்றனர் என்றே சொல்லலாம்.
முதலில் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது, முன்னோட்ட வீடியோ யூ டியூப்பில் சாதனையை சத்தமில்லாமல் படைக்க, அதே சூட்டோடு தமிழில் “வந்த இடம்” என்று தொடங்கும் பாடலை வெளியிட்டனர். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் கிட் அடித்ததை நினைவில் கொண்டு, வந்த இடம் பாடலிலும் லுங்கி அணிந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்...