எண்ணித்துணிக விமர்சனம்
ஒரு நகைக்கடைக் கொள்ளையில் மூன்று பேர் கொல்லப்பட, நாயகன் கொள்ளைக்காரர்களைத் தேடி அவர்கள் முன் நிற்கத் துணிகிறான்.
குற்றவாளிகளைத் தப்ப விடாமல் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்பதை மீறி நாயகனிடம் ஒரு சாகச உணர்வு தொற்றிக் கொள்கிறது. ‘அவங்க முன்னாடி போய் நிற்கணும்’ என்ற தீர்மானத்துடன் உள்ளார். அப்பொழுது போலீஸ்? ஐடியில் வேலை செய்யும் நாயகன் அளவிற்குக் கூட விசாரணையை மேற்கொள்ளாமல் சுதாரிப்பின்றி உள்ளனர். அதிலும் அமைச்சர் ஒருவர், போலீஸுக்குப் பயங்கர குடைச்சல் தருகிறார்.
அமைச்சராக வைபவின் அண்ணன் சுனில் நடித்துள்ளார். முதல் பாதியில், காலில் வெந்நீர் ஊற்றியது போல் ஓர் அவஸ்தையோடு வருபவர், இரண்டாம் பாதியில் ரசிக்க வைக்கிறார். அவரது ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தும், தனது ஸ்க்ரீன் பிரசென்ஸால் மற்ற இருவரை விடத் தனித்துத் தெரிகிறார். கொள்ளைச் சம்பவத்தில் தன் கணவனை இழ...