”சவாலான ஸ்டண்ட்களை விரும்பியே ஏற்றுக் கொண்டேன்” – நடிகர் கிருஷ்ணா
மிகச் சில நடிகர்களே கதையம்சம் சார்ந்த படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதற்காகப் பாராட்டப்படுவார்கள். அவர்களை ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதில் நடிகர் கிருஷ்ணாவும் ஒருவர். தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் கிருஷ்ணா. அவர் முதல்முறையாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வில்லனாக நடிக்கிறார்.இயக்குநர் கெளதம் தனது படங்களில் வலுவான வில்லன் கதாபாத்திரங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்றவர். கிருஷ்ணா சந்தேகத்திற்கு இடமின்றி 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தில் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை சரியாகத் திரையில் பிரதிபலித்துள்ளார். படம் தொடர்பாக வெளியாகியுள்ள புரோமோ காட்சிகளிலேயே இது தெளிவாகத் தெரிகிறது. படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள தனது...