Shadow

Tag: வல்லவன் வகுத்ததடா தமிழ்ப்பட விமர்சனம்

வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இரண்டு திருடர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் மற்றொரு திருடன், காதலைச் சொல்லி ஏமாற்றி திருடும் மற்றொரு திருடி, வட்டிக்கு பணம் கொடுத்து, பணத்தை திரும்ப கொடுக்காதவர்களிடம் அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்துவிடுவேன் என்று மிரட்டும் வில்லன், இவர்களுக்கு மத்தியில் தன் குடும்பத் தேவைக்காக டாக்ஸி ஓட்டிக் கொண்டே பெரும் தொகை கடன் கேட்டு அலையும் அப்பாவி இளைஞி. இந்தக் கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதை தான் வல்லவன் வகுத்ததடா திரைப்படத்தின் கதை. படத்தில் ஹைலைட்டாக இருக்கும் கதாபாத்திரம் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் தான். தன்னிடம் வழக்கு கொடுக்க வருபவர்களிடம் நாசுக்காக உண்டியல் வைத்து வசூல் வேட்டை நடத்துவதும், விஷமத்தனமாக சிரிப்பதும், கலையாத கேசத்தை மீண்டும் மீண்டும் சரி செய்தபடி ஹேர் ஸ்டைல் சரியாக இருக்கா..? என்று கேட்பதுமென ஒட்டுமொத்த படத்தையும் உயிர்ப்போடு வைத்திருப்பவர் இந்த இன்ஸ்பெ...