முள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்
மகேந்திரனுக்குப் புனைவுகளைப் பற்றிய நுண்மையானதொரு புரிதல் இருந்தது. அதைப் பார்வையாளனை உள்ளிழுக்கும் விதமாகத் திரைமொழியாக மாற்றும் வித்தை இயல்பாக அமைந்திருந்தது.
புதுமைப்பித்தனிடமிருந்து அவர் உந்துதல் பெற்று உதிரிபூக்கள் எழுதினார் என்பது ஒன்றே அவருடைய படைப்பூக்கத்தின் மேன்மைக்கு சான்று. உதிரி பூக்கள் தமிழ் சினிமாவிற்கான அடையாளத்தில் ஒன்று.
அவருக்கு மிகச் சிறப்பான திரைமொழி ஞானம் இருந்தது. அது அவருக்கு இயல்பாக அமைந்திருந்தது.
‘முள்ளும் மலரும்’ குறுநாவலாக பரிசு பெற்ற படைப்பு. ஆனால் மகேந்திரனின் திரைக்கதை அமைப்பில் அது இன்னமும் சில உச்சங்களைக் கண்டது.
காளிக்குத் தன்னுடைய மேலதிகாரி மீது தீராத எரிச்சல். அவர் பேசும் இறுக்கமான சட்டதிட்டங்கள் அவனுடைய சாதாரண வாழ்க்கையைக் குறையுள்ளதாகக் காட்டுகிறது. ஆனால் அந்த அதிகாரியும் காளியின் தங்கையும் ஒருவர்பால் ஒருவர் ஈர்ப்புக் கொள்கிறார்கள்.
இதை சாதா...