Shadow

Tag: வாசு பக்னானி

சின்ன மாப்பிள்ளை 1995 டூ கொலையுதிர் காலம் 2017

சின்ன மாப்பிள்ளை 1995 டூ கொலையுதிர் காலம் 2017

சினிமா, திரைச் செய்தி
நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை இயக்குகிறார் சக்ரி டோலெட்டி. இவர், ‘ உன்னை போல் ஒருவன்’ படமும், ‘பில்லா 2’ படமும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை  'பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம் இயக்குகிறது. வட இந்தியத் திரையுலகில், குறிப்பாக ஹிந்தித் திரையுலகின் தயாரிப்புத் துறையில் மிகப் பெரிய ஜாம்பவனாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானி அவர்களின் நிறுவனம் அது. "சினிமா மீது எனக்குக் காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் வெளியான சின்ன மாப்பிள்ளை திரைப்படம் தான். அந்தப் படத்தை ஹிந்தியில் நான் 'கூலி நம்பர் 1' என்ற தலைப்பில்  ரீமேக் செய்தேன். அதனைத் தொடர்ந்து சதி லீலாவதி படத்தை ரீமேக் செய்த எங்கள்   'பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்' நிறுவனம், தற்போது முதல் முறையாகக் கொலையுதிர் காலம் படம் மூலம் தமிழ...