Shadow

Tag: வாத்தி திரைப்படம்

வாத்தி விமர்சனம்

வாத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சோழவரம் அரசுப்பள்ளிக்கு ஒப்புக்குச் சப்பாணியாக அனுப்பி வைக்கப்படுகிறார் கணித ஆசிரியர் பாலமுருகன். ப்ரோமஷனுக்காக ஆசைப்படும் பாலமுருகன், மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடத்திற்குத் தனது சாமர்த்தியத்தால் மாணவர்களை வர வைக்கிறார். பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, எப்படி 45 மாணவர்களையும் பள்ளிப் படிப்பை முடிக்க வைக்கிறார் வாத்தி பாலமுருகன் என்பதே படத்தின் கதை. ஷா ராவும், ஹைப்பர் ஆதியும் நகைச்சுவைக்குச் சொற்பமாகவே உதவியுள்ளனர். அவர்களைப் பாதியிலேயே துண்டித்து அனுப்பி விட்டு தனுஷை மட்டுமே முழுமையாக நம்பிக் களமிறங்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் அட்லூரி. தன்னிகெல்லா பரணி, சாய்குமார் முதலிய நடிகர்களும் சாட்சிகளாக வந்து செல்கின்றனரே தவிர்த்து கதைக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத பாத்திரங்களிலேயே நடித்துள்ளனர். ஆசிரியை மீனாக்‌ஷியாக சம்யுக்தா நடித்துள்ளார். பண பலம் பொருந்திய கல்வித்தந்தையான வில்லனை எதிர்க்கு...
தனுஷின் ‘வாத்தி’ படத்தினுடைய விநியோகப் பஞ்சாயத்து

தனுஷின் ‘வாத்தி’ படத்தினுடைய விநியோகப் பஞ்சாயத்து

சினிமா, திரைத் துளி
தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியது. கலைப்புலி S. தாணு தயாரிப்பில் வெளிவந்த ‘நானே வருவேன்’ திரைப்படம் தரமான படம் என்ற பெயரை எடுத்த போதிலும், பொன்னியின் செல்வனின் வெற்றியில் பெரிதும் வெளியில் தெரியாமல் மறைந்துவிட்டது. இருப்பினும் அந்தப் படம் தமிழகம் முழுவதும் 13 கோடி வசூல் செய்தது. இதுவும் ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ‘வாத்தி’. தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தின், ‘வா.. வாத்தி’ பாடல் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்தத் திரைப்படத்தின் விநியோக உரிமை சென்னையில் உள்ள சில மீடியேட்டர்களின் தவறான செயல்பாடுகளால் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது. வாத்தி திரைபடம் டிசம்பர் 2 ஆம் தேதி ...