சிபிராஜ் வசமானது ‘வால்டர்’
சிபிராஜின் தந்தை சத்யராஜ் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத படமான ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் சிபிராஜின் படத்துக்கு, வால்டர் என்ற தலைப்பு கிடைக்க பிரச்சனை நிலவி வந்தது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, சிபிராஜின் படத்திற்கு 'வால்டர்' என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. தலைப்பின் உரிமையை மாற்றிக் கொடுக்க முழு மனதுடன் சம்மதித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கடிதம் அளித்துள்ளார் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சிங்காரவேலன்.
இதைப் பற்றி தயாரிப்பாளர் பிரபு திலக், “சிபிராஜ் அவர்களின் தந்தை சத்யராஜ் சாரின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்தப் படத்துக்கு 'வால்டர்' என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்க...