Shadow

Tag: விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்

அமானுஷ்யமும் மர்மமும்

அமானுஷ்யமும் மர்மமும்

நம்பினால் நம்புங்கள், புத்தகம்
அமானுஷ்யமும் மர்மமும் போல் ஈர்ப்பான விஷயங்கள் உலகத்தில் வேறெதுவுமில்லை. அதைப் பற்றிப் பேசவும் கேட்கவும் எப்பொழுதும் தயாராகவே இருப்போம். அதுவே செவி வழி கதையாக இல்லாமல் தனக்கேற்பட்ட அனுபவங்களை ஒருவர் தொகுத்தால்? அப்படித்தான், ஜேம்ஸ் வான் பிராக் தனது புத்தகமான, Ghosts Among Us என்பதில் ஆவிகள் உலகத்தினைப் பற்றிச் சொல்கிறார். புத்தகத்தில் திகிலான சம்பவங்களோ, புனைவுக்குரிய சுவாரசியங்களோ இல்லை. மரணத்தைப் பற்றியும், மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றியும் அலசுகிறார் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஆவி மீடியம்களில் ஒருவரான ஜேம்ஸ். அவர் சந்தித்த எண்ணற்ற மனிதர்கள் பற்றியும், ஆவிகள் பற்றியும் சொல்லியுள்ளார். அனைத்துமே ஆச்சரியத்தையும், நம்மை ஆழ்ந்து யோசிக்கவும் வைக்கும் அனுபவங்கள் என்பதுதான் புத்தகத்தின் விசேஷம். மனிதர்களுக்கு நல்லது செய்யவே ஆவிகள் எப்பவும் அவர்களைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆவிகள...