
விக்டோரியா & அப்துல் விமர்சனம்
பொறாமை கொள்ள வைக்கும் கதைக்கரு. மகாகனம் பொருந்திய இங்கிலாந்து பேரரசிக்கும், பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த இந்தியப் பணியாளரான அப்துல் கரீம்க்கு இடையேயான நட்பினைச் சொல்லும் படம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எனக் காட்டி, பின் சில மைக்ரோ நொடிகளில் ‘பெரும்பாலும்’ என்ற வார்த்தையைக் குசும்புடன் இணைக்கிறார் இயக்குநர் ஸ்டீஃபன் ஃப்ரேயர்ஸ்.
இந்தக் கதைக்கருவிற்கு ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஒரு வார்டு கவுன்சிலரையே மையக் கதாபாத்திரமாகக் கொண்டு, அவரைக் கலாய்க்க இயலாத முதிர்ச்சியற்ற உணர்ச்சி பொங்கும் சமூகத்தில் இருந்து, இப்படத்தை நோக்கினால் எழும் பிரம்மாண்ட பிரமிப்பைத் தவிர்க்கவே முடியவில்லை. படத்தின் முதற்பாதி அங்கதம் மிகவும் ரசிக்க வைக்கிறது. உதாரணத்திற்கு, அப்துலும் மொஹமதும் இங்கிலாந்து துறைமுகத்தில் காலடி வைத்ததும், அவர்களை வரவேற்கும் ஆங்கிலேயர், “நாகரிகத்திற்கு வரவேற்கிறோம்” என்கிறார். பின்னணிய...