Shadow

Tag: விக்ரம் சுகுமாரன்

இராவண கோட்டம் விமர்சனம்

இராவண கோட்டம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘மதயானைக் கூட்டம் (2013)’ படம் தந்த அனுபவத்தைப் பத்தாண்டுகளாகியும் மறக்க முடியாதளவு மிக நேர்த்தியாக நேட்டிவிட்டியுடன் இயக்கியிருந்தார் விக்ரம் சுகுமாரன். அந்தப் படம், ஹிந்தியில் ‘ராவன்பூர்’ என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. விக்ரம் சுகுமாரனின் அடுத்த படைப்பிற்காகச் சினிமா ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களின் மிக நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, ஒருவழியாக அவரது அடுத்த படைப்பான “இராவண கோட்டம்” திரையரங்கை எட்டிவிட்டது. ஏனாதி எனும் கிராமம் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 16 கிராமங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நல்லவர் போஸ். அந்தக் கோட்டத்திலேயே, நல்லது கெட்டது அறிந்த ஒரே ஆள். அந்த ஏரியா சமஉ (MLA) கூட போஸைப் பார்த்தால் பம்முவார். போஸ், ஊர் ஒற்றுமையைக் காப்பாற்ற உயிரையும் கொடுப்பார்; ஊர் ஒற்றுமைக்குப் பாதகமென்றால் உயிரையும் எடுப்பார். ஆளுங்கட்சி...
இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
கண்ணன் ரவி க்ரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்". மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகர் இளவரசு, “இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள். விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராகப் பணி செய்வது மிகக் கடினம் இருவருக்கும் மிகப் பெரிய வாழ்த்துகள். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்குத் தெரியும். தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கான காரணங்களையும் இந்தப் படத்தில் பேசியுள்ளனர். ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். கண்டிப்பாக இந்தப்...