Shadow

Tag: விக்ரம் திரைப்படம்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தொடரும் விக்ரம் படத்தின் சாதனை

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தொடரும் விக்ரம் படத்தின் சாதனை

சினிமா, திரைத் துளி
விக்ரம் திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூலை 8, 2022 அன்று பிரத்தியேகமாக வெளியானது. வாரயிறுதியில் அதிக பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற புதிய சாதனையையும் விக்ரம் படம் படைத்துள்ளது. இந்த மெகா ஆக்‌ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க பார்வையாளர்களுக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு இது. கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற கூடுதல் மொழிகளிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் திரையிடப்பட்டுள்ளது. இது அந்தந்த மொழி பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கமல்ஹாசனின் அசத்தலான தோற்றம் மற்றும் மனத...
விக்ரம் விமர்சனம்

விக்ரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைதியின் தொடர்ச்சியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படமாக வந்துள்ளது விக்ரம். மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவது போல் ஒரு மேல்தோற்றம் தெரிந்தாலும், போதை வஸ்துகளற்ற சமூகத்திற்கான போராடும் வேட்டையாளராக விக்ரம் காட்டும் ஆக்ரோஷம் தான் படத்தின் கதை. மல்டிஸ்டார் படத்தை எப்படி ஹேண்டில் செய்யவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகப் படம் திகழ்கிறது. ஒற்றை நாயகனின் சூப்பர் ஹீரோயிச பாணியில் சிக்குண்ட தமிழ்த் திரையுலகின் நார்சிஸ சூழலில் இருந்து வெளிவந்து, படத்தின் முதற்பாதி நாயகனாகப் பஹத் பாசிலை மிளிர விட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் வில்லன் யார், நாயகன் யார் என பஹத் பாசிலின் இன்வெஸ்டிகேஷனில் முதற்பாதி பரபரவென ஓடுகிறது. இந்த யுக்தி, சந்தனமாக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கும், பின்பாதியில் விக்ரமாகக் கர்ஜிக்கும் கமல் ஹாசனிற்கும் ஆழமான அடித்தளம் அமைத்துள்ளார். அதே போல் படம...