விக்ரம் வேதா – க்ளைமேக்ஸ் புதிர் முடிச்சவிழ்த்தல்
சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கலந்துரையாடலில், விக்ரம் வேதா படத்தின் க்ளைமேக்ஸ் பற்றி இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இருவரும் பகிர்ந்து கொண்டது:
"மூன்று ஆப்ஷன்களுக்கு வாய்ப்புள்ளன.
1. ஒன்று, வேதா விக்ரமைச் சுடுவது.
2. இரண்டு, விக்ரம் வேதாவைச் சுடுவது.
3. மூன்றாவது, இருவரும் தங்கள் வழியில் பிரிந்து சென்றுவிடுவார்கள்.
அவர்கள் என்னாவார்கள் என்பதை நாங்க சொல்ல விரும்பவில்லை. அதை ஆடியன்ஸின் பாயின்ட் ஆஃப் வியூவிற்கு விட்டுவிட்டோம்” என்றனர்.
இனி, இதுதமிழின் புரிதல் என்னவாக இருந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
வேதாளம் விக்கிரமாதித்யன் கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டு, தோளில் தொங்கியவாறு கதைகள் சொல்லும். கதையின் முடிவில் ஒரு கேள்வி கேட்கும். விக்கிரமாதித்யன் புதிருக்குப் பதில் சரியாகச் சொல்லவில்லை எனில், விக்கிரமாதித்யன் தலை வெடித்துவிடும் என சாபமும் கொடுக்கும்.
தன்னிகரற்ற மன்னரான விக்கிரமாதித்...