ஆண் தேவதை விமர்சனம்
முன்னாள் பத்திரிகையாளரான இயக்குநர் தாமிரா, இயக்குநர் இமயத்தையும் சிகரத்தையும் ஒன்றாக நடிக்க வைத்து ரெட்டச்சுழி எனும் படத்தை 2010 இல் எடுத்தவர். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவர் தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார்.
சிறகுகள் உதிர வெண்ணிற இறக்கைகள் மேகத்தினூடே பறக்க, ஆண் தேவதை என்ற பெயர் திரையில் வருகிறது. படத்தின் தொடக்கமே, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய சமுத்திரக்கனியின் விளக்கத்தோடு, "தீதும் நன்றும் கற்றுத் தருவோம்"என படம் தொடங்குவது சிறப்பு. அந்தச் சிறப்பு, படம் முழுவதும் நீள்கிறது. எது சரி, எது தவறென விளக்கிக் கொண்டே இருக்கிறார் சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் கடுப்பாகும் நாயகி, "என்னை அட்வைஸ் பண்ணியே கொன்னுடாத!" எனக் கதவை டமாலென மூடுகிறார்.
நாயகி ரம்யா பாண்டியனும், சமுத்திரக்கனியும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆதிரா, அகரமுதல்வன் என இரட்டைக...