
பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம் | Peranbum Perungobamum review
குழந்தையைக் கடத்தினான் என அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் ஜீவாவைக் காவல்துறை கைது செய்கிறது. குழந்தையைத் தான் கடத்தவில்லை ஆனால் தனக்கு என்ன நேர்ந்தது, தானென்ன செய்தேன் என்று ஒரு பெரும் பஞ்சாயத்தை இழுத்து விடுகிறான் ஜீவா. ஜாதி வெறி பிடித்த ஒரு கிராமத்தினின்று அதிகாரத்திற்கு வருபவர்களை ஜீவா பெருங்கோபம் கொண்டு எப்படிப் பழிவாங்குகிறான் என்பதுதான் படத்தின் கதை.
சாதிவெறி பிடித்த சகோதரர்கள் முத்துப்பாண்டி, ரத்னவேலுவாக முறையே மைம் கோபியும், அருள்தாஸும் நடித்துள்ளார்கள். சகோதர வில்லன்களாக நடிக்க மிகப் பொருத்தமானவர்கள். கேங்கரஸ் படத்திலும் பணத்தாசை பிடித்த சகோதர வில்லன்களாக நடித்திருப்பர். தாடி வைத்திருக்கும்போது இனிகோ பிரபாகரை நினைவுப்படுத்தும் முகச்சாயலில் உள்ளார் விஜித் பச்சன். நாற்பதுகளில் இருப்பது போன்ற தோற்றத்தில், ஒரு சோர்வையும், அனைத்தையும் இழந்து பழிவாங்கும் வெறியை மட்டும் தக...