விட்னெஸ் விமர்சனம்
பொதுச் சமூகத்தின் பரவலான கவனத்தைப் பெறாத ஒரு பெரும் சமூக அவலத்திற்கு, பார்வையாளர்களைச் சாட்சியாக்கியுள்ளார் இயக்குநர் தீபக். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையும், அதனால் நிகழும் மரணங்களும் இன்றும் நிகழ்கின்றன. அதுவும் எத்துணை நயமாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் மேல் அப்பணி சுமத்தப்படுகிறது என உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் தீபக்.
கல்லூரி மாணவனான பார்த்திபனைக் கட்டாயப்படுத்தி கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கிச் சுத்தம் செய்ய வைக்கின்றனர். விஷ வாயு தாக்கி அவன் இறந்துவிட, அக்கொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைகின்றனர் அந்த அப்பார்ட்மென்ட் வாசிகளும், கான்ட்ராக்டரும். தொழிற்சங்கத் தலைவரான பெத்துராஜின் தூண்டுதலில், பார்த்திபனின் அம்மா இந்திராணி, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென நீதிமன்றத்தை அணுகுகிறார். என்ன தீர்ப்பு வருகிறது என்பதே படத்தின் முடிவு....