Shadow

Tag: வித்யாபாலன்

நேர்கொண்ட பார்வை விமர்சனம்

நேர்கொண்ட பார்வை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! - புதுமைப் பெண், பாரதியார் மகாகவி இறந்தே 100 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஆனால், ஆண் வகுத்த வல்லாதிக்க விதிகளை மீறி, பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பின் மூலம், இந்த இழிநிலையை மீண்டும் பொதுத்தளத்தில் ஓர் அழுத்தமான விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார் இயக்குநர் வினோத். ‘அர்ஜுன் ரெட்டி’ போன்று ஆணாதிக்கத்தை ஹீரோயிசமாகப் பேசும் படத்தினை ரீமேக் செய்யும் சம காலத்தில், அஜித் போன்ற மாஸ் ஹீரோ, “பின்க் (Pink)” எனும் அற்புதமான ஹிந்திப் பட...