Shadow

Tag: வித்யா

தடம் விமர்சனம்

தடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எழிலும் கவினும் ஓருரு இரட்டையர்கள் (Identical twins). அவர்களில் ஒருவர் கொலையாளி என்பதற்கான புகைப்படத் துப்பு காவல்துறையினர்க்குக் கிடைக்கிறது. அவ்விரட்டையரில் கொலையாளி யாரென்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க படாதபாடுபடுகின்றனர். கொன்றது யார், ஏன் கொன்றார், அவர் அழிக்காமல் விட்ட தடம் எது என்பதன் தான் படத்தின் கதை. கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யத் தொடங்கும் முதல் ஃப்ரேமிலேயே நம்மைத் திரைக்குள் இழுத்துவிடுகிறார் மகிழ் திருமேனி. சிகரெட் பிடிக்கும் சேச்சி; பெண்களின் மார்புக்கச்சைக்கும், கொல்கத்தா ஹெளரா பாலத்துக்கும் ஒரே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது எனும் நாயகனின் இன்ஜினியரிங் மேஜிக் வசனம் எனப் படத்தின் முதல் 35 நிமிடங்களுக்குக் கதைக்குள் போகாமல் காட்சிகளாலும் பாடல்களாலும் மட்டுமே ரசிக்க வைக்கிறார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்தின் ரசனையான எடிட்டிங்கே அதற்குக் காரணம். ஒரு கொலை நடந்து, ...
களரி விமர்சனம்

களரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
களரி என்பது பழந்தமிழர் தற்காப்புக் கலை. 'போர்க்களம்' என்ற பொருளில் படத்தின் தலைப்பு உபயோகிக்கப்பட்டுள்ளது. மிகத் தைரியமான பெண்ணான தேன்மொழி மீது பாசமாக உள்ளார் பயந்தாங்கொள்ளி அண்ணன் முருகேஷ். தங்கையின் கல்யாணத்திற்காக ஓடியோடி உழைக்கிறார். அன்வரைக் காதலிக்கும் தேன்மொழிக்கு, மூர்த்தியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மூன்று மாதங்களில், தேன்மொழி தன்னைத் தீயிட்டுக் கொள்கிறாள். ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழும் முருகேஷ் தன் தங்கையின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்குகிறாளா என்பதுதான் படத்தின் கதை. கொச்சியில் குடியேறிய தமிழர்கள் வசிக்கும் பகுதியான வாதுருத்தி தான் படத்தின் களம். கதாபாத்திரங்கள் அனைவரும் கேரளாவிலேயே பிறந்த தமிழர்கள். நாயகனின் குடிக்காரத் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் தவிர்த்து அனைவரும் மலையாளம் கலக்காத தமிழே பேசுகின்றனர். படத்தின் தயாரிப்பாளரான செனித் கெல...
பசங்க – 2 விமர்சனம்

பசங்க – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னைத் தானே அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தான் பெற்ற குழந்தைகளையும் மன அழுத்தத்திற்குத் தள்ளும் பெற்றோர்களுக்கான படமிது. தங்கள் உலகத்திற்குள் சிறுவர்களை இழுக்க நினைக்கும் பெற்றோர்களிடம், குழந்தைகள் உலகத்தை அறிமுகம் செய்கிறது பசங்க-2. நற்சாந்துபட்டியில், ஒரு விளையாட்டு மைதானத்தில் படம் தொடங்குகிறது. அங்கேயே படம் முடிந்தும் விடுகிறது. அக்காட்சியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மூலம் பேசத் தொடங்கும் பாண்டிராஜ், படம் முழுவதும் பெற்றோர்களிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கிறார். சிறுவன் நிஷேஷும், சிறுமி வைஷ்ணவியும் அதகளப்படுத்தியுள்ளனர். கத்தி மேல் நடந்திருக்கும் பாண்டிராஜைப் பத்திரமாக கரை சேர்த்துள்ளனர். இச்சிறுவர்கள் மட்டுமல்ல, மருத்துவர் தமிழ் நாடனாக வரும் சூர்யா, ஆசிரியை வெண்பாவாக வரும் அழகான அமலா பால், கவினின் பெற்றோர்களாக வரும் ராம்தாஸும் வித்யாவும், நயனாவின் ...
அதிபர் விமர்சனம்

அதிபர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அதிபர் எனும் தலைப்பு தொழிலதிபரைக் குறிக்கிறது. 2002 இல் இருந்து 2008க்குள் நடந்த உண்மைக் கதையின் அடிப்படையில் மசாலா அலங்காரம் பூசி எடுக்கப்பட்ட படம். குறிப்பாக தயாரிப்பாளர் சிவகுமாரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. கனடாவில் இருந்து தொழில் புரிய வரும் ஜீவன், ‘மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குகிறார். அவர் மிகவும் நம்பும் ஒருவராலேயே, நிறுவனத்துக்குள் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. படத்தில் நட்சத்திரப் பட்டாளங்களுக்குக் குறைவே இல்லை. வரிசை கட்டி வந்தவண்ணமே உள்ளனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி தோன்றியதும் படத்தின் சுவாரசியம் இரட்டிப்பு ஆகிறது. துரதிர்ஷ்டவசமாக நாயகன் ஜீவனை விட சமுத்திரக்கனியே மனதில் நிற்கும் கதாபாத்திரமாக உள்ளார். அவர், ‘பாஸு.. பாஸு’ எனப் பேசும் வசனங்கள் ரசிக்க வைக...