
“லெஜண்ட் வெற்றி நிச்சயம்” – அன்புச்செழியன்
லெஜண்ட் சரவணன் முதல் முறையாகத் தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், 'மொசலோ மொசலு' பாடல் 14 மில்லியன் மற்றும் 'வாடிவாசல்' பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களைத் தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான சக்சஸ்ஃபுல் விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி.என்.அன்புச்செழியன், 'தி லெஜண்ட்' படத்தைப் பார்த்ததும், "என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்" என்று பாராட்டி, "நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும்" எனக் கூறி அதி...