Shadow

Tag: வினோதினி வைத்தியநாதன்

2K லவ் ஸ்டோரி – மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது

2K லவ் ஸ்டோரி – மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது

சினிமா, திரைச் செய்தி
சிட்டி லைட் பிக்சர்ல், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி” ஆகும். க்ரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, “சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார். இதில் எல்லாப் பாடல்களும் நான் எழுதியுள்ளேன். ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார். மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது இந்த ட்ரெய்லர்” என்றார். நடிகை வினோதினி வைத்தியநாதன், “இ...
சூரகன் விமர்சனம்

சூரகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு விபத்தில் கண் பார்வை பாதிப்புக்குள்ளான நாயகன், அதை மறைத்து போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார்.  அவரின் கண் பார்வை குறைபாட்டால் ஒரு அப்பாவிப் பெண் பலியாகிவிட, நாயகன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். அதே நேரம் ஒரு உயிர் போய்விட்டதே என்கின்ற குற்றவுணர்ச்சி மேலெழ நாயகன் விரக்தியுடன் இருக்கிறார். அந்த சூழலில் சாலையில் அடிபட்டுக் கிடந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தும் அப்பெண்ணையும் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. இந்த குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொள்ள நாயகன், சாலையில் அடிபட்டுக் கிடந்த பெண் சாவில் இருக்கும் மர்மத்தை உடைத்து தன் குற்றவுணர்வில் இருந்து விடுபட நினைக்கிறான். அந்த இளம்பெண் மரணத்தின் பின்னால் இருக்கும் நபர்களை நாயகன் கண்டறிந்தானா..? தன் குற்றவுணர்ச்சியில் இருந்து விடுபட்டானா..? என்பதை விளக்குகிறது திரைக்கதை.ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம். அதன் பின்னா...
Are you ok baby விமர்சனம்

Are you ok baby விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 ஒரு விசித்திரமான சூழலில் தனக்குப் பிறந்த குழந்தையை ஒரு தாய் பணம் பெற்றுக் கொண்டு தத்தெடுத்து வளர்க்க விரும்பும் தம்பதிக்கு கொடுத்துவிடுகிறாள். அவளே ஒரு வருடம் கழித்து தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தையும்  அணுகுகிறாள்.  முடிவு என்ன ஆனது என்பதே “Are You Ok Baby” திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை.இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் ஹோஸ்டிங் செய்து நடத்திய “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியைப் போன்ற “சொல்லாததும் உண்மை” என்கின்ற நிகழ்ச்சியில் இருந்து தான் திரைப்படம் துவங்குகிறது.  அந்த நிகழ்ச்சியை திரைப்படத்திற்குள் வழங்குபவராக லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருப்பதோடு இப்படத்தை இயக்கியும் இருக்கிறார்.“சொல்லாததும் உண்மை” என்கின்ற அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒரு இளம்பெண், தன் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய குழந்தையை சிலர் பணம் கொடுத்து பெற்றுக் கொண...