Shadow

Tag: வினோதினி

நடிகர்கள் விமல், சூரி மீண்டும் இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

நடிகர்கள் விமல், சூரி மீண்டும் இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் 'படவா' திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு  நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர்.இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், 'கேஜிஎஃப்' புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர்.சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர்.'படவா' ரிலீசுக்கு தயாராகி வரும்...
பரோல் விமர்சனம்

பரோல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இரண்டு மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கான படம் எனத் தொடங்குகிறது பரோல். அண்ணன் கரிகாலன் கொலைகாரனாக இருந்தும், அவன் மீது மட்டும் அம்மா ஆராயி மிகவும் பாசமாக இருக்கிறார் என்ற மனக்குறையுடன் இருக்கிறான் தம்பி கோவலன். ஆளுநரைப் பார்த்து, தன் மகன் கரிகாலனின் விடுதலைக்குக் கருணை மனு அளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக ஆராயி இறந்துவிடுகிறார். அண்ணனை வர வைக்காமல், அம்மாவின் இறுதிச் சடங்கைச் செய்துவிடலாமென நினைக்கிறான் கோவலன். கரிகாலனின் நண்பர்கள், பிணத்தை எடுக்க விட மாட்டோம் என பிரச்சனை செய்ய, வேறு வழியின்றி அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறான் கோவலன். மிகவும் ஆபத்தான குற்றவாளி என அறியப்படும் கரிகாலனை பரோலில் எடுப்பது மிகச் சவாலான காரியமாக உள்ளது. கரிகாலனுக்கு பரோல் கிடைப்பதில் ஏற்படும் இடைஞ்சல்களைக் கோவலன் எப்படிச் சமாளித்து அழைத்து வருகின்றான் என திரைக்கதை பயணிக்கிறது.&n...
தேவராட்டம் விமர்சனம்

தேவராட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போல் தேவராட்டம் என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. ஆனால் அத்தகைய கலைக்கும் படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதாலும், படத்தில் வானுலக மனிதர்கள் இல்லாததாலும், படத்தின் தலைப்பிற்கு நேரடியாக ஒரே பொருளைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. தொழிலுக்காகக் கொலை செய்பவரையும், கொலையைத் தொழிலாகச் செய்பவரையும் பகைத்துக் கொள்கிறார் வெற்றி. அவர்கள் இவரை வெட்டப் பார்க்க, காவற்கார வம்சத்தைத் சேர்ந்த இவர் அனைவரையும் வெளுக்க, படம் முழுவதும் ஒரே வெட்டாட்டம் தான். கடைக்குட்டி சிங்கம் படம் இயக்குநரை ரொம்பப் பாதிச்சிருக்கும் போல, நாயகனுக்கு ஆறு அக்காக்கள். போஸ் வெங்கட், ஆறுபாலா, சூரி, முனீஷ் ராஜா முதலியவர்கள் அக்கா கணவர்களாக நடித்துள்ளனர். மூத்த அக்கா, மாமாவாகப் போஸ் வெங்கட்டும், வினோதினி வைத்தியநாதனும் குணச்சித்திரப் பாத்திரத்தில் அசத்தியுள்ளனர். நாயகனுடன் நெருக...