ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் தொடர் தொடங்கி 15 வருடங்கள் ஆகிறது. இந்தத் தொடரின் ஆறு படங்களில் ஒன்றில் மட்டும் நடித்திராத முக்கிய கதாநாயகனான பால் வாக்கர், ஏழாவது பாகத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக 2013இல் விபத்தில் இறந்துவிட்டார். இந்தத் தொடர் வரிசை படங்களுக்கு அது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. அதில் இருந்து படக்குழு எப்படி மீண்டது என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அது மட்டுமில்லாமல், இந்தத் தொடரின் நான்கு படங்களை இயக்கிய ஜஸ்டின் லின்னுக்கு பதிலாக ஹாரர் பட இயக்குநரான ஜேம்ஸ் வான் இப்படத்தை இயக்கியுள்ளது மேலும் எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், தாய்லாந்தைச் சேர்ந்த ஏஷியன் ஹீரோவான டோனி ஜா முதல்முறையாக இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.
ஜேஸன் ஸ்டாத்தம்தான் படத்தின் வில்லன் என்ற ...