Shadow

Tag: விஷால் சந்திரசேகர்

மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசை பணிகள் துவங்கியது

மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசை பணிகள் துவங்கியது

சினிமா, திரைச் செய்தி
'சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் திரு.மாணிக்கம் திரைப்படத்தில் கவரவிருக்கிறார். சமுத்திரக்கனி. நாசர் போன்றோர்  முக்கிய வேடத்தில் நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கியது.பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் இத்திரைப்படத்தில்  பாடல்களை எழுதியுள்ளனர்.‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்....
சித்தா விமர்சனம்

சித்தா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிறு குழந்தைகள் கைகளில் போன் கொடுப்பதும், அவர்கள் போனில் இருக்கும் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தலாம் என்பதை பதைபதைப்புடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பேசி இருக்கிறது “சித்தா”  திரைப்படம்.  சித்தப்பா என்பதை சுருக்கி “சித்தா, சித்தா” என்று கூப்பிடுவதையே  படத்தின் தலைப்பாக வைத்திருக்கின்றனர்.அண்ணன் மறைவுக்குப் பின்னர் தன் அண்ணி மற்றும் அவர்களின் 8 வயது குழந்தையுடன் வாழும் ஈஸ்வரனாகிய சித்தார்த்தின் வாழ்க்கை இயல்பான மகிழ்ச்சியுடன் செல்கிறது. சிறுவயதில் தொலைத்த காதலியும் கூட எதிர்பாராவிதமாக மீண்டும் சித்தார்த் வாழ்க்கையில் வந்து ஐக்கியம் ஆகிறாள்.  சித்தார்த்திற்கு தன் அண்ணன் மகள் ஈஸ்வரி என்றால் உயிர்.  அது போல் சித்தார்த்தின் பள்ளிகாலத் தோழன் வடிவேலுவுக்கு அவனின் அக்கா மகள் வைஷ்ணவி என்றால் உயிர். இவர்கள் எல்லோரும் ஒரு குடும்பம் போல் மகிழ்ச்சியாக ...
மெல்ஃபெர்ன் 23′ விருதை வென்ற ‘சீதா ராமம்’

மெல்ஃபெர்ன் 23′ விருதை வென்ற ‘சீதா ராமம்’

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
 ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நடத்தப்படுவதும் அவற்றில் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து விருது அளிப்பதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மெல்போர்ன் நகரில் 14வது இந்தியத் திரைப்பட விழா நடைபெற்றது.இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கானப் பிரிவில் போட்டியிட்ட “சீதா ராமம்” திரைப்படம் அப்பிரிவில் விருதை வென்றிருக்கிறது. சென்ற ஆண்டு துல்கர் சல்மான் – மிருணாள் தாக்கூர் ஆகியோர் நடிப்பில் ஹனுராகவ புடி இயக்கத்தில் வெளிவந்த அற்புதமான காதல் காவியம்  “சீதா ராமம்”.  யாருமற்ற ஒரு இராணுவ வீரனுக்கும், ராஜா ராணி பரம்பரையில் வந்த ஒரு ராணிக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி உருவாகி இருந்த அத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரும் சாதனை புரிந்தது நினைவு இருக்கலாம்.இப்படத்தை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான வை...
“அடுத்த சிம்ரன்!” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

“அடுத்த சிம்ரன்!” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

சினிமா, திரைச் செய்தி
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸும், ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் R.H.விக்ரமும், விஷால் சந்திரசேகரும் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார். “இரட்டையர்கள் என்றாலே ஒரு மேஜிக் மாதிரி தான். அவர்களுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம். குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுக்கு எனக்கு எப்பவுமே பயம். ஆனால் இந்தப் படத்தில், என்னைப் போலவே இருக்கும் ரொம்ப கூலான சதீஷ் மாஸ்டர் தயவால் குத்துப் பாட்டுக்கும் ஆடியிருக்கிறேன். இயக்குநர் ராஜ்குமார் சில முக்கிய தருணங்களில் நான் தான் நடிக்கணும் என எனக்காக நின்றார். ரொம்ப அன்பானவர். தெளிவான இயக்குநர்” என...
சவாரி விமர்சனம்

சவாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொடர் கொலைகள் செய்யும் சைக்கோவும், அவனைத் தேடும் ஏ.சி.பி. சாலமனும் ஒரே காரில் சவாரி செய்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. படம் எந்தப் பூச்சுகளையும் நம்பாமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடக்கி விடுகிறது. அங்கிருந்தே செழியனின் ஒளிப்பதிவு உங்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. எதையெல்லாம் ரசிகர்களால் யூகிக்க முடியுமோ, அதற்கு இடம் தராமல் இயக்குநரே முந்திக் கொண்டு அதைச் சொல்லி விடுகிறார். இடைவேளை வரை இப்படி விறுவிறுப்பாகச் செல்லும் சவாரி, அதன் பின் சற்றே நிதானமாய்ப் பயணிக்கிறது. ஏ.சி.பி. சாலமனாக புதுமுகம் பெனிட்டோ நடித்துள்ளார். படத்தின் பலம் அதன் கதாபாத்திரத் தேர்வுகளே! மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டுள்ள படத்தில், நடிகர்கள் நிறைவாக நடிக்காவிட்டால் சோடை போய்விடும். இவ்விஷயத்தில் இயக்குநர் குகன் சென்னியப்பன் மிகத் தெளிவாக தியேட்டர் ஆர்டிஸ்ட்களையும், தேர்ந்த நடிகர்களையும் உ...
ஜில் ஜங் ஜக் விமர்சனம்

ஜில் ஜங் ஜக் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'இது மெஸ்சேஜ் சொல்ற படமில்லைங்க. இரண்டு மணி நேரம் ஜாலியா தியேட்டர்ல போய் சிரிச்சுட்டு வர படம்' என்கிறார் படத் தயாரிப்பாளராகியுள்ள சித்தார்த். அவரது நிறுவனத்தின் பெயர் 'ஏடாகி எண்டர்டைன்மெண்ட்'. ஒரு சரக்கினை சீனர்களிடம் ஒப்படைக்கும்படி, ஜில் - ஜங் - ஜக் ஆகிய மூவருக்கும் வேலையொன்று தரப்படுகிறது. அம்மூவரும் அந்த வேலையைச் சொதப்பாமல் செய்தார்களா என்பதுதான் படத்தின் கதை. ஜக் - ஜாகுவார் ஜகனாக சனந்த். டீசல் என்ஜின் போல் மெதுவாகக் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி, படத்தின் முடிவில் தன் நடிப்பால் ஜில்லையும் ஜங்கையும் ஓரங்கட்டி விடுகிறார் சனந்த். 'டிமான்ட்டி காலனி' படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார். ஒரு பொருளைக் காட்டி, இதென்ன நிறமெனக் கேட்டால், அவர் கவிதையாக பதில் சொல்லும் விதம் கலக்கல். ஜங் - ஜங்குலிங்கமாக அவினாஷ் ரகுதேவன். படத்தில் இவரது வேலை "வாட்ச்" சு. சரக்கைக் குறித்த நேரத்தில் டெ...