Shadow

Tag: விஷால்

பாயும் புலி விமர்சனம்

பாயும் புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காவல்துறை அதிகாரி ஒருவர், எப்படியெல்லாம் பாய்ந்து தன் கடமையைச் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அசிஸ்டெண்ட் கமிஷ்ணர் ஜெயசீலனாக விஷால். ஒரு எஸ்.ஐ.-இடம் தனது செயலுக்கான நியாயத்தை மிகவும் பொறுமையுடன் விளக்கும் நல்லவர். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். படத்திலுள்ள அனைத்து வில்லன்களும் எத்தனை பேரைக் கொல்கிறார்களோ, அதை விட அதிகமான நபர்களை இவர் கொல்கிறார். சாரி, என்கவுண்ட்டர் செய்கிறார். இந்தப் படத்திற்கு ‘காவல் கோட்டம்’ என பெயர் வைக்கத் திட்டமிட்டு இருந்தனராம். சாலையைக் கடக்கப் பயப்படும் செளம்யாவாக காஜல் அகர்வால். ‘நான் மகான் அல்ல’ படத்தில் கவர்ந்தது போல் கவரவில்லை. படத்தின் முதல் பாதியைக் காப்பாற்றுவது, படத்தோடு சம்பந்தமில்லாத காமெடி ட்ராக்கில் வரும், மனைவிக்குப் பயந்த கான்ஸ்டபிள் சூரிதான். இரண்டாம் பாதியைச் சுவாரசியப்படுத்துகிறார் தொழிலதிபர் செல்வமாக வரும் சமுத்திரக்கனி. தமிழ் சினிமாவின் தவி...
நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை. 29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, தன் குறைபாடுகளை மீறி சிகப்பு மனிதனாக மாறி, தன் சொந்த வெறுப்பினை மட்டும் தீர்த்துக் கொள்கிறார். அதோடு அவரது பத்தாவது ஆசையும் பூர்த்தியாகிறது. இந்திரனாக விஷால். மிக மிகத் தெளிவாக இருக்கார். மிகை ஹீரோயிசம், காமெடிக் காட்சிகளில் விஜய்யை இமிடேட் செய்வது போன்றவற்றைலாம் முற்றிலுமாக தவிர்த்து விட்டு, கதைக்குத் ...
பட்டத்து யானை விமர்சனம்

பட்டத்து யானை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பட்டத்து யானை – அரச சின்னங்களைத் தாங்கியதும், அரசன் பவனி வரவும் அரண்மனையில் வளர்க்கப்படும் யானை. அப்படி யார் இந்தப் படத்தில் யானை என்று தெரியவில்லை. ஐஸ்வர்யாவை வில்லன்களிடமிருந்து ஏன், எதற்கு, எப்படி சரவணா காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.சமையல்காரர் சரவணனாக விஷால். படத்தின் முதற்பாதியின் கடைசியில் அடிக்கத் தொடங்குபவர், அதன்பின் படம் முடியும் வரை அனைவரையும் சகட்டுமேனிக்கு பறக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். டி.வி.எஸ். 50, கோயில் உண்டியல், பெரிய இரும்பு ஜல்லிக் கரண்டி, சோடா பாட்டில், பீர் பாட்டில் என ஒருமுறை உபயோகித்த ஆயுதத்தை மறுமுறை உபயோகிக்க மாட்டேங்கிறார். எத்தனையோ பேருடன் எவ்வளவோ சண்டைப் போட்டாலும்.. சட்டை கிழிந்து விடாமல் அலேக்காக வில்லன்களை துவம்சம் செய்யும் மாபெரும் சண்டக்கோழியாக உள்ளார். ஒரு துளி ரத்தம் சிந்தாமல், அனைவரையும் இரத்தக்களறியாக்கி சிதறவிடுகிறார். பிரதான வில...