ஆரம்பம் விமர்சனம்
அஜீத், விஷ்ணுவர்தன், சுபா, ஆர்யா, நயன்தாரா என ஏகத்துக்கும் கூட்டப்பட்ட எதிர்பார்ப்பு, கிஞ்சித்தும் குறையாமல் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது. அஜீத் ரசிகர்களுக்கும், தமிழ்த்திரை ரசிகர்களுக்கும் இந்த தீபாவளி நல்லதோர் ஆரம்பமாக இருக்கும்.ஊழல் செய்யும் அரசியல்வாதி ஒருவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு, தீவிரவாதி ஒருவனைத் தப்பிக்க வைக்கப் பார்க்கிறார். பின் என்னானது என்பதுதான் கதை.அமர்க்களமாக அறிமுகமாகிறார் அஜித். மங்காத்தாவில் மிச்சம் வைத்திருந்த வில்லத்தனத்தை இப்படத்தில் தொடர்கிறார். தனது வயதிற்கேற்ற பாத்திரத்தில் தோன்றுகிறார். இளம் வெண்தாடியிலும் செம ஸ்டைலிஷாக இருக்கிறார். ‘டொக்.. டொக்..’ என சத்தமிட்டு அனைவருக்கும் டைம் ஃபிக்ஸ் செய்கிறார். படத்தில் இவருக்கு ஜோடியும் இல்லை; டூயட்டும் இல்லை. நாயகனாக நடிப்பவருக்கு 60 வயது என்றாலும், திரையில் கண்டிப்பாக 20>30 வயதுடைய நாயகி, காதலியாக இருந்தே ...