
விஸ்வரூபம்.. II விமர்சனம்
2013 இல் வந்த விஸ்வரூபம் படத்தின் முதல் 45 நிமிடங்கள் இப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் ஃப்ரெஷாக இருக்கும்
அப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் எதிர்பார்ப்பைக் கேட்கவேண்டுமா என்ன?
ஓமரை உயிருடனோ, பிணமாகவோ விசாம் அகமது காஷ்மீரி பிடிப்பது தான் இரண்டாம் பாகத்தின் கதையென, முதற்பாகம் பார்த்த அனைவரும் இலகுவாக யூகித்துவிடுவர்.
அமெரிக்காவைக் காப்பாற்றிய கையோடு, விசாம் அகமது காஷ்மீரி நேராக இந்தியா வந்திருக்கலாம். ஆனால், சேகர் கபூரின் பிரிட்டிஷ் நண்பரின் சடலத்தைத் தர இங்கிலாந்து செல்கின்றனர். போன இடத்தில், இங்கிலாந்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கமலின் தோள்களில் விழுந்துவிடுகிறது. 'சீசியம் பாம்'-இன் மீதான காதலைப் புறந்தள்ள முடியாமல் இயக்குநர் கமல் தத்தளித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இங்கிலாந்தைப் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்தால், ஆண்ட்ரியாவையும் பூஜா குமாரையும் வில்ல...