Shadow

Tag: விஸ்வரூபம்

பெரும் விருட்சத்தின் விழுது நான் – ‘பத்மபூஷன்’ கமல்

பெரும் விருட்சத்தின் விழுது நான் – ‘பத்மபூஷன்’ கமல்

சினிமா, திரைத் துளி
ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவு கற்றுத் தந்தது. இத்தகைய விழாக்களை நடத்தவேண்டிய அவசியமென்ன என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது. எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டுமன்று. என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டுமொரு குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன். தேசிய கீதம் இசைத்த பொழுது மனது ஏனோ நெகிழ்ந்தது. நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதுனர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத்திரையில் தேசபக்தியுள்ள என் தாய் தந்தையாரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது. ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன். இன்று பல்துறை வ...
ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்

ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்

அரசியல், கட்டுரை
அனுப்புநர்:பாரக் ஓபாமா, ஜனாதிபதி, வெள்ளை மாளிகை, 1600 பென்சில்வேனியா ஏவ், வாஷிங்டன் டி.சி. - 20500, யுனைடேட் ஸ்டேட்ஸ். +1 202-456-1111.பெறுநர்:கமல் ஹாசன், இராஜ்கமல் இன்டர்நேஷ்னல் ஃப்லிம்ஸ், 218 டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. +91 44 24336348.மதிப்பிற்குரிய ஐயா,பொருள்: தாங்கள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடை குறித்து.எஃப்.பி.ஐ. யின் அறிக்கையின்படி தாங்கள் அமெரிக்க இறையாண்மைக்கு எதிரானவர் என்பது தெளிவாக நிரூபனமாகி உள்ளது. ஆகையால் தங்களுக்கு அமெரிக்காவில் நுழைய அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. தயாரிப்பாளார் பேரி ஆஸ்பெர்னின் அழைப்பின் பேரில் தாங்கள் ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். அந்த ஒப்பந்தத்தை நீக்கும்படி பேரி ஆஸ்பெர்ன் அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். தாங்கள் இத்தடையை மீறி அமெரிக்காவி...
விஸ்வரூபம் விமர்சனம்

விஸ்வரூபம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் ஒருவர் நியூயார்க் நகரை தாலிபான் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவது தான் படத்தின் கதை.படத்தின் முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் கமல் என்னும் உன்னத கலைஞர் தனது நடிப்பின் உச்சத்தைத் தொட்டுள்ளார். அவரது நடனம், பார்வை, நடை, வசனம் பேசும் தொனி என சகலத்திலும் ரசிகர்களை ஈர்க்கிறார். அதன் பின் படத்தில் கோலேச்சுவது இயக்குநர் கமல். தமிழ் சினிமா கண்டிராத ஒரு தொழில்நுட்ப விருந்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளார். படத்தின் மாபெரும் பலம் வசனங்கள். வசனங்களுக்கு Epigram என்றொரு தனி குழு அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி முனையில் நாயகன் இரத்தம் வருமளவு உதை வாங்கும் பொழுதும்.. வசனங்கள் அதன் தீவிரத்தன்மையைக் குறைத்து ரசிக்க வைக்கிறது. அதே போல் நாயகிக்கும், எஃப்.பி.ஐ. அதிகாரிக்கும் நடக்கும் கடவுள் பற்றிய உரையாடல் குறிப்பிடத்தக்கது. இன்றளவும் ப...
சந்தர்ப்பவாதமும் அதிகாரமும்

சந்தர்ப்பவாதமும் அதிகாரமும்

கட்டுரை, சமூகம்
பல தடைகளைத் தாண்டி 25 ஆம் தேதி வெளிவர இருந்த விஸ்வரூபம் படத்திற்கு 15நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாத்,த.மு.மு.க., இ.மு.லீக் உள்ளிட்ட 24 அமைப்புகள்(?) ஒன்று சேர்ந்து ட்ரைலரை மட்டும் பார்த்து விட்டு இந்திய முஸ்லீம்களை இழிவுப்படுத்துகிறது.இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உள்துறை செயலரை சந்தித்துமனு கொடுக்கின்றனர். உடனடியாக படத்தை மேற்கண்ட அமைப்புகளுக்கு திரையிட்டு காட்ட கமல்ஹாசன் கேட்டுக் கொள்ளப்படுகிறார். அதை ஏற்று அவர்களுக்கு படம் திரையிடப்படுகிறது. படத்தைப் பார்த்து விட்டு அவர்கள் இப்படம் வெளிவந்தால் ஒட்டு மொத்த தமிழகமும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும், இதுமுஸ்லீம்களை இழிவுப்படுத்துகிறது என்றும் ஓலமிடுகின்றனர். இதை உடனே எதிர்பார்த்திருந்த தமிழக அரசு உடனடியாக இரவோடு இரவாக ஒரு உத்தரவை வெளியிடுகிறது. இப்படத்தை வெளியிட 15 நாட்கள் தடை வி...