Shadow

Tag: ‘வெண்ணிலா ’கிஷோர்

ஹனுமான் விமர்சனம்

ஹனுமான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிறப்பிலிருந்தே தான் ஒரு சூப்பர் ஹீரோவாக ஆக வேண்டும் என்று வெறி கொண்டு அலையும் ஒரு கதாபாத்திரம்.  பிறப்பிலிருந்தே எந்தவொரு நோக்கமும் இன்றி தான் தோன்றித்தனமாக அலைந்து திரியும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு எதிர்பாராத விதமாக சூப்பர் ஹீரோவின் சக்தி கிடைக்கிறது.  இந்த இரு நேரெதிர் கதாபாத்திரமும் அந்த சக்திக்காக மோதிக்கொள்ளும் மோதலே இந்த “ஹனுமான்” திரைப்படம்.இந்திய மொழித் திரைப்படங்களும் இந்த இருபதாம் நூற்றாண்டில் சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரமிப்பூட்டும் காட்சிகளை படைக்கத் துவங்கி இருக்கும் இந்த நேரத்திலும், அயோத்தியில் ராமர் கோவில் திறக்க இருக்கும் நேரத்திலும் இந்த ‘ஹனுமான்’ திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பாகுபலி தொடங்கி ஆதிபுருஷ் திரைப்படம் வரை சிஜி தொழில்நுட்பத்துடனும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்துடனும் கற்பனையான காட்சிகளை திரைக்கு கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை இந்த...
அமேசானில் ஸ்ட்ரீம் செய்யப்படும் சைக்கலாஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் “ஸ்பார்க் L.I.F.E”

அமேசானில் ஸ்ட்ரீம் செய்யப்படும் சைக்கலாஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் “ஸ்பார்க் L.I.F.E”

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'ஸ்பார்க் L.I.F.E தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.'இளம் நாயகன்' விக்ராந்த், நடிகைகள் மெஹரின் பிர்சாதா மற்றும் ருக்ஷா தில்லான் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் 'ஸ்பார்க் L.I.F.E'. இந்தத் திரைப்படம் நவம்பர் 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இளம் நாயகன் விக்ராந்த் கதையின் நாயகனாக அறிமுகமானதுடன், இப்படத்திற்கு கதை, திரைக்கதையும் அவரே எழுதி இருக்கிறார். இப்படத்தை டெஃப் ஃப்ராக் நிறுவனம் தயாரித்துள்ளது.டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்‌ தயாரித்த இந்த திரைப்படத்திற்கு 'ஹிருதயம்' மற்றும் 'குஷி' புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மலையாள நடிகர் குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்துள்ளார். திரில்லர் ஜானரிலான படைப்புகளை விரும்பி ரசிக்கும் ரசிகர்களை ...
விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா,  ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்க, இவர்களோடு ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும்  இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இ...