Shadow

Tag: வெப்பம் குளிர் மழை திரைப்படம்

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வெப்பமும் குளிரும் இணைந்தால் மழை பொழிவது போல், ஆணின் வெப்பமான விந்தணுவும், பெண்ணின் குளிர்வான கருமுட்டையும் இணைவதால் குழந்தை பிறக்கிறது என்பதை உணர்த்தும் குறியீட்டுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். கல்யாணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும், குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏச்சுபேச்சுக்கும் ஆளாகின்றனர் நாயகனும் நாயகியும். நாயகனுக்குத் கோயில் திருவிழாவில் கிடைக்கும் முதல் மரியாதை பற்றிய ஊர் பஞ்சாயத்தில், குழந்தையில்லாததால் அவமானப்படுத்துகிறார். நாயகனின் வேதனையைப் பொறுக்கமாட்டாமல், நாயகி கணவனை விட்டு விலகி, நாயகனை இரண்டாம் கல்யாணத்திற்கு வற்புறுத்துகிறாள். அதில் நாயகன் ஆர்வம் நாயகன் காட்டாததால், நாயகி வேறொரு முடிவு எடுக்கிறாள். அம்முடிவு, அத்தம்பதியின் வாழ்வை எப்படிப் பாதித்தது என்பதே படத்தின் கதை. கிராமத்து வாழ்வியலை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து. நா...