Shadow

Tag: வைபவ்

மரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய வைபவ் & செல் முருகன்

மரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய வைபவ் & செல் முருகன்

சினிமா, திரைத் துளி
மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ்!நடிகர் வைபவ்வின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.நடிகர் வைபவுடன் செல்முருகனும் இணைந்து நடித்து வருகிறார் இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, வைபவ்வின் 27 வது திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை படக்குழு நட்டுள்ளனர். மேலும் அங்கு பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது....
ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சினிமா, திரைச் செய்தி
KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இவ்விழாவினில்..திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். ...
யாமிருக்க பயமே இயக்குநர் டீகேவின் காட்டேரி

யாமிருக்க பயமே இயக்குநர் டீகேவின் காட்டேரி

சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகில் பேயை வைத்து 'யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆத்மிகா, ''திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடி...
வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்

வைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்

Trailer, காணொளிகள், சினிமா, திரைத் துளி
"ஷ்வேத் - எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்" சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குநரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் "லாக்கப்". இயக்குநர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய SG சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் - வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் "லாக்கப்" திரைப்படத்தில் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் வெளியான "லாக்கப்" படத்தின் டீசர் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. படத்தின் எதிர்ப்பார்ப்பைக் கூட்டும் வகையில் இப்படத்தின் டீசர் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டது. மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகிய...
சிக்சர் விமர்சனம்

சிக்சர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆதிக்கு மாலைக்கண் நோய் உள்ளது. மாலை ஆறு மணிக்குள் டானென வீட்டுக்குள் வந்துவிடுவார். இந்தக் குறையின் காரணமாக கல்யாணம் வேண்டாம் என மறுப்பவருக்குக் கிருத்திகாவைப் பார்த்ததும் பிடித்துவிடுகிறது. உண்மையை மறைத்து எப்படிக் கல்யாணம் செய்து கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நகைச்சுவைப் படத்தில் வில்லன்களின் பாடு தான் திண்டாட்டமாய் இருக்கும். ஆர்.என்.ஆர்.மனோகரும், ஏ.ஜே.வும் அப்படியான வில்லன்கள். செம பில்டப்களுடன் அறிமுகமாகும் வில்லன்கள், அதே வேகத்தில் காமெடியன்கள் ஆகுகிறார்கள். அதே போல், கலக்கப் போவது யாரு ராமருக்கும் ஒரு கொடூரமான பில்டப். அவரும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. ஜி.வி.பிரகாஷுடன் குப்பத்துராஜா படத்தில் பல்லக் லல்வானி, கிருத்திகா எனும் பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். நாயகனுடன் இரவில் இரண்டு, மூன்று வெளியில் சென்றும், அவரது குறையைக் கண்டுபிடிக்காத லூஸு ஹீரோயின் வேஷம் தான் வழக...
டாணா – தமிழகத்தின் செல்லக்குரல்

டாணா – தமிழகத்தின் செல்லக்குரல்

சினிமா, திரைத் துளி
வித்தியாசமாக, அதே சமயம் தனக்கேற்றது போன்ற கதைகளைத் தெர்ந்தேடுத்து நடித்து வருகிறார் வைபவ். ஜூலை 22 அன்று வெளியான டாணா படத்தின் டீசரே அதற்குச் சான்று. போலீஸ் குடும்பத்தில் பிறந்த நாயகன் உணர்ச்சி வசப்பட்டால் அவனது குரல் பெண் குரலாக மாறிவிடும் எனும் வித்தியாசமான கதைக்களத்தைத் தொட்டுள்ளார் இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி. அதைச் சுட்டிக் காட்டும் வகையில், "இந்தக் குரலை வச்சிக்கிட்டு நீ பாடுன்னா, கிராண்ட் ஃபினாலே வரைக்கும் போகலாம். சின்னக்குயில் சித்ரா கிட்ட நான் பேசுறேன்" என்று டீசரில் யோகிபாபுவின் டைமிங் வசனம் அதகளம். இப்படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்க, பாண்டியராஜன், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தயாரிப்பு நிறுவனம் - நோபல் மூவீஸ் ப்ரொடக்ஷன்ஸ் >> தயாரிப்பு - எம்.சி. கலைமாமணி & எம்.கே.லக்ஷ்மி கலைமாமணி >> எழுத்து, இயக்கம் - யுவராஜ் சு...
மேயாத மான் விமர்சனம்

மேயாத மான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மேயாத மான் என்ற தலைப்பு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. ஏன் பரவசமூட்டுகிறது என்று கூடச் சொல்லலாம். தலைப்பு விஷயத்திலேயே நாயகன் ஓர் அடிப்படை நேர்மையைக் கடைபிடித்துள்ளார் என்றே தோன்றுகிறது. 'ஸ்ரீவள்ளி (1945)' படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. முருகன் வள்ளியைக் கரெக்ட் செய்யப் பாடும் பாடலில், வள்ளியினது கற்பைப் போற்றும் வகையில் வரும் பதம்தான் 'மேயாத மான்'. அதாவது படி தாண்டா விர்ஜின் கேர்ள் என்பதன் கவித்துவ பதம் தான் மேயாத மான். ஆனால் இதையே இயக்குநர் ரத்ன குமார், நாயகன் தான் மேயாத மான் என மிகச் சாதுரியமாக நிறுவுகிறார். ஒரே வகுப்பில் படித்தும், மூன்று வருடமாக நாயகியிடம் காதலைச் சொல்லாத நாயகன் (இதயம் முரளி) தான் மேயாத மேனாம். கண் முன் புல்லுக்கட்டு இருந்தும் அதை மேயாதவன், அதாவது காதலைச் சொல்லாததால் நாயகன் மேயாத மேனாம். அடடே.! ஆனால், நாயகனுக்கு ஏன் நாயகியைப் பிடிக்...
ஹலோ நான் பேய் பேசுறேன் விமர்சனம்

ஹலோ நான் பேய் பேசுறேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேய்ப் படம் என்றாலே காமெடிப் படம் என்றாகி விட்டது சூழல். இந்தக் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து விட்டாலே மக்கள் ரசிக்கத் தொடங்கி விடுகின்றனர். சாலை விபத்தில் சிக்கி இறக்கும் பெண்ணின் மொபைலைத் திருடி விடுகிறான் திருடனான நாயகன். மொபைலில் இன்கம்மிங் காலாக வரும் பேய் செய்யும் அட்டகாசம் தான் படத்தின் கதை. கதாநாயகனாக வைபவ். தனக்குக் கிடைத்த சோலோ வாய்ப்பைச் சிந்தாமல் சிதறாமல் உபயோகித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. வசனம், கதாபாத்திரத் தேர்வு, நாயகன் வீட்டின் உட்புற கலை அமைப்பு, குத்து டான்ஸ் பள்ளியின் முகப்பு என படம் நெடுகும் கலகலப்பை அனைத்து விஷயங்களிலும் பிரதிபலிக்க விட்டுள்ளார் இயக்குநர் S.பாஸ்கர். இயக்குநர் சுந்தர்.சி, இந்தப் படத்தைத் தயாரித்ததில் ஓ...