
தொரட்டி – இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் கதை
1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தொரட்டி தமிழ்த் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர்.
இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்தக் கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.
படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்காக அந்தப் பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து, அப்பகுதி மக்களுடன் இரண்டரக் கலந்து படத்தில் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.
அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, காதலை, உறவுகளின் உணர்வுகளை , கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்ட...