Shadow

Tag: ஷான் கருப்புசாமி

நோட்டா விமர்சனம்

நோட்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் அப்படியே படமாக ஆனந்த் ஷங்கரால் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வினோதன் தனது மகன் வருணிடம் முதலமைச்சர் பதவியை, இரண்டு வாரத்திற்குக் கைமாற்றிவிட்டு தன் மீது நீதிமன்றதிலுள்ள வழக்கைச் சந்திக்கத் தயாராகிறார். வழக்கின் தீர்ப்பு வினோதனுக்குப் பாதகமாகி விட, வருண் முதலமைச்சர் பதவியில் நீடிக்குமாறு ஆகிவிடுகிறது. சொந்த கட்சி ஆட்களின் அத்துமீறல், இயற்கைச் சீற்றம், குடும்பத்தின் மீதான உயிர் அச்சுறுத்தல் என வருண் தனக்கு முன்னுள்ள சவால்களை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. சமகால அரசியல் பகடியும், ரெளடி முதல்வராக வரும் விஜய் தேவரகொண்டாவும் தான் படத்தின் பலம். விஜய் தேவரகொண்டாவைச் சுலபமாய் ஏற்றுக் கொள்ள முடிகிறது. படம் அவரைச் சுற்றித்தான் நடக்கிறது, என்றாலும் அவரைத் தவிர வேறு எவருக்குமே முக்கியத்துவம் தராதது ஏன் எனத் தெரியவில்லை? படம் அடுத்தடு...
வெட்டாட்டம் நாவல் – ஒரு பார்வை

வெட்டாட்டம் நாவல் – ஒரு பார்வை

கட்டுரை, புத்தகம்
நாவலின் முதல் அத்தியாத்தைப் படித்து முடித்து இரண்டாம் அத்தியாத்திற்குள் சென்று விட்டால், 266 பக்கங்களையும் வாசித்த பின்பே தான் கீழே வைக்க முடியும். அப்படி ஒரு விறுவிறுப்பான கதை. மிகத் தேர்ந்த கதைசொல்லியாக, சுவாரசியமான நடையில் நாவலைப் படைத்துள்ளார் ஷான் கருப்பசாமி. கதையின் ஜானர் ஒரு பொலிடிக்கல் த்ரில்லர். மக்களின் மனங்களை வசீகரத்த நடிகரான வினோதன் தோல்வியே காணாத முதல்வராகப் பதவியில் வீற்றிருக்கிறார். அவர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நேரத்தில், ராஜினாமா செய்து முதல்வர் பதவியை மகன் வருணுக்குத் தற்காலிக ஏற்பாடாகத் தாரை வார்த்துக் கொடுக்கிறார். அதில் துளியும் விருப்பமில்லாமல், 'மூன்று வாரம் பல்லைக் கடித்துக் கொள்ளலாம்' என வேண்டாவெறுப்பாகக் கவர்னரைச் சந்தித்து பதவி பிரமாணம் எடுக்கிறான் வருண். வினோதனுக்குப் பாதகமாகத் தீர்ப்பு வருகிறது; தலைநகரத்துக்குக் குடிநீர் தரும் பிரம்மாண்டான ஏரிகளில...