ஷாம்லி: குழந்தை நட்சத்திரம் – ஓவியர்
சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றவர் பேபி ஷாம்லி. நடிகையாகப் பொருத்தமான வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் காலகட்டத்தில், ஓவியம் மற்றும் நாட்டியக் கலைகளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினார். ஓவியத் துறையில் மேதையான ஏ.வி. இளங்கோவின் வழிகாட்டுதலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார். இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சி, அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு ஆகியவற்றின் காரணமாக அவர் ஏராளமான ஓவியப் படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்.
அவர் வரைந்த ஓவியப் படைப்புகளை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் வண்ணமயமான சட்டகத்தில் பொருத்தி காட்சிப்படுத்தியிருக்கிறார். இவரது படைப்புகளில் இடம்பெறும் பெண்கள், தங்களின் சுதந்திரமான ஆன்மாவை வெளிப்படுத்துவது போல் உள்ளன. சில படைப்புகளில் பெண்கள் தங்களுடைய சமூக தளைகளிலிருந்து விடுபட்டு, இலட்சியத்தை நோக்கி நகரும் வகையில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஓவியக் க...