Shadow

Tag: ஷாரிக் ஹாசன்

நேற்று இந்த நேரம் விமர்சனம்

நேற்று இந்த நேரம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாயகனும் நாயகியும் மூன்றாண்டுகளாகக் காதலிப்பதைக் கொண்டாட நினைக்கின்றனர். மேலும், கல்லூரி வாழ்க்கை முடிவதாலும், நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் என இளைஞர்கள் எழுவர் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலாக்கு வந்த இடத்தில் நாயகன் காணாமல் போகிறார். நாயகனுக்கு என்னானது என்ற புலனாய்வு விசாரணையே படத்தின் கதை. ‘ராஷோமோன் (1950)’ எனும் ஜப்பானியத் திரைப்படப் பாணியில், கதாபாத்திரங்கள் அனைவரும் காணாமல் போன நாயகனைப் பற்றிச் சொல்கின்றனர். நாயகனைப் பற்றிய விவரணை நண்பர்களின் பார்வையிலிருந்து விரிகிறது. அந்த விவரணையில், நாயகன், எதிர் நாயகனாக மெல்ல மாற்றம் பெறுகிறான். காணாமல் போன நாயகனே கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், மேலும் ஒரு நண்பன் காணாமல் போகிறான். ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா ஆகியோர் நடித்துள்ளனர். கெவின். N இசையமைக்க,...
ஜிகிரி தோஸ்த் விமர்சனம்

ஜிகிரி தோஸ்த் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மூன்று நண்பர்கள். அதில் ஒருவன் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைபவன், மற்றொருவன் தீவிரவாதிகளின் செல்ஃபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் சாதனம் ஒன்றைத் தன் கல்லூரி ப்ராஜெக்ட் ஆகச் செய்துவிட்டு, அது செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் போனதை எண்ணி நொந்து போய் இருப்பவன்.  இவர்களுக்கு உதவிக் கொண்டு ஜாலியாகச் சுற்றித் திரியும் மற்றொருவன். இவர்கள், ஒரு பெண்ணை ஒரு கும்பல் கடத்திக் கொண்டு செல்வதைப் பார்க்கிறார்கள்.  மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா, யூகிக்க முடிந்தால் அது தான் ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை. மிக எளிமையான கதை, அதைவிட எளிமையான திரைக்கதை என ஒரு அடிப்படையான சினிமா தான் ஜிகிரி தோஸ்த். அது தவிர்த்து அதை ஆழமாக அலசிப் பார்ப்பதற்கு வேறொன்றும் இல்லை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எவ்வளவு நேர்த்தியாக எடுக்க முடியுமோ அவ்வளவு நேர்த்தியாகப் படத்தை எடுத்திருக்...